அம்புலா
அம்புலா (Ambula)(ஒடியா: ଆମ୍ବୁଲ) என்பது ஒடிசாவில் கோடைக்காலத்தில் வெயிலில் உலர்த்திய மாம்பழம் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும்.[1] இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது.[2] கஞ்சி போன்ற புளிப்புச்சுவையுடைய கறிகளில் இது புளிப்பிற்காகப் பயன்படுகிறது. இதைச் சிவப்பு அல்லது பச்சை மிளகாய், பூண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து தயார் செய்து "பக்கலா" உடன் பரிமாறலாம்.
செய்முறை
தொகுஅம்புலா புளிப்புச் சுவையுடைய மாம்பழத்தினைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.[3] மாம்பழத்தினை நன்கு கழுவி தோலினை முதலில் அகற்றவேண்டும். பின்னர் உப்பு கலந்து பல நாட்கள் சூரிய ஒளியில் மாம்பழத் துண்டுகள் உலர்த்தப்படுகிறது. மீன் மற்றும் ஓக்ரா போன்ற பல்வேறு கறிகளில் அம்புலாவை புளிப்புச் சுவை சேர்க்கப் பயன்படுத்தலாம்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delectable dishes of Odisha that will awaken the foodie in you". www.timesnownews.com (in ஆங்கிலம்). 7 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
- ↑ Ming, Ding Choo (2014). "Memory and Local Stories: Sources of History and Knowledge". International Journal of the Malay World and Civilisation 2: 15–22. https://www.researchgate.net/publication/312169527.
- ↑ "With brand tags, sweet times ahead for mango growers". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.
- ↑ "Delectable dishes of Odisha that will awaken the foodie in you". www.timesnownews.com (in ஆங்கிலம்). 7 December 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-12-29.