அம்பை - 18 (நெல்)
அம்பை - 18 (ASD 18) எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 31 நெல் இரகத்தையும், ஐ ஆர் - 50 (ADT 31 / IR 50) நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
அம்பை - 18 ASD 18 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஏடிடீ-31 x ஐ ஆர் - 50 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
105 - 110 நாட்கள் |
மகசூல் |
7300 கிலோஎக்டேர் |
வெளியீடு |
1991 |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, அம்பாசமுத்திரம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
வெளியீடு
தொகுதமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1991 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
காலம்
தொகுகுறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 105 -110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[4]
சாகுபடி
தொகுநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 18 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
தொகு- இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 7300 கிலோவரை ( 7.3 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் நெற்பயிர் குலைநோயை எதிர்க்கும் திறனுடையது.[5]
- இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் மிதமெல்லிய அளவில் காணப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-04.
- ↑ 2.0 2.1 "Rice Knowledge Management Portal ASD 18". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ CROP VARIETIES RELEASED BY THE - TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY FROM 1971 to 2003 - I. AGRICULTURE
- ↑ "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-04.
{{cite web}}
: Text "Long duration varieties" ignored (help) - ↑ குறுவைக்கு ஏற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!