அம்பை - 20 (நெல்)
அம்பை - 20 (ASD 20) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 18348 - 38 - 3, ஐ ஆர் - 25863 - 61 - 32, மற்றும் ஐ ஆர் - 58 (IR 18348-38-3 / IR 25863-61-32 / IR 58) என மூன்று நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
அம்பை - 20 ASD 20 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஐஆர்-18348-38-3, ஐஆர்-25863-61-32 & ஐஆர்-58 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
110 - 115 நாட்கள் |
மகசூல் |
5800 கிலோஎக்டேர் |
வெளியீடு |
1997 |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, அம்பாசமுத்திரம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
வெளியீடு
தொகுதமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1997 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
காலம்
தொகுகுறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[4]
சாகுபடி
தொகுநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்ததாக கூறப்படும் இந்த நெல் வகை, புதுச்சேரி புறப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
சிறப்புப் பண்புகள்
தொகு- இந்த நெல் இரகம் ஒரு எக்டேருக்கு 5800 கிலோவரை ( 5.8 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் நெற்பயிர் குலைநோய், தண்டு துளைப்பான், இலை மடிப்பு, மற்றும் உறை அழுகல் போன்றவைகளை எதிர்க்கும் திறனுடையது.
- இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் அரைக் குள்ள அளவில் காணப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
- ↑ "Varieties released ASD 20". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
- ↑ CROP VARIETIES RELEASED BY THE - TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY FROM 1971 to 2003 - I. AGRICULTURE
- ↑ "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-11.
{{cite web}}
: Text "Long duration varieties" ignored (help)