அம்பை - 2 (நெல்)
அம்பை - 2 (ASD 2) பிரபலமாக வெள்ளை கார் சம்பா (Kar samba white) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
அம்பை - 2 ASD 2 |
---|
வேளாண் பெயர் |
வெள்ளை கார் சம்பா |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
110 - 115 நாட்கள் |
மகசூல் |
4000 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1944 |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, அம்பாசமுத்திரம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
வெளியீடு
தொகுதமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1944 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
தொகுகுறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]
சாகுபடி
தொகுநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 2 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
தொகு- இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 4000 கிலோவரை (4.0 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் நெற்பயிர், முதிர்ந்த நிலையிலும் தானியமணிகள் உதிர்வதில்லை.
- இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் குட்டையான தடித்த வடிவில் உள்ளது.
- இந்த வகை நெற்பயிர் கார் பருவத்திற்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.[1][2]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.
- ↑ 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ASD 2". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.
{{cite web}}
: Text "Long duration varieties" ignored (help)