அம்பை - 3 (நெல்)
அம்பை - 3 (ASD 3) பிரபலமாக வீதி விடங்கன் (Veedhividangan) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
அம்பை - 3 ASD 3 |
---|
வேளாண் பெயர் |
வீதி விடங்கன் |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
130 - 135 நாட்கள் |
மகசூல் |
3000 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1944 |
வெளியீட்டு நிறுவனம் |
TNAU, அம்பாசமுத்திரம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
வெளியீடு
தொகுதமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1944 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
தொகுமத்தியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நடு கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]
சாகுபடி
தொகுநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 3 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
தொகு- இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3000 கிலோவரை (3.0 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் நெற்பயிர், முதிர்ந்த காலங்களில் நெற்கதிர்கள் சாய்வதில்லை. மேலும் இந்நெல் வகை, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
- இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் குட்டையான தடித்த வடிவில் உள்ளது.[1][2]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.
- ↑ 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ASD 3". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-07.