அம்பை - 8 (நெல்)

அம்பை - 8 (ASD 8) பிரபலமாக தூயமல்லி (Thuyamalli) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

அம்பை - 8
ASD 8
வேளாண் பெயர்
தூயமல்லி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
85 - 90 நாட்கள்
மகசூல்
3000 கிலோஎக்டேர்
வெளியீடு
1951
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தொகு

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1951 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

தொகு

மிக குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 85 - 90 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

தொகு

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 8 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

தொகு
  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 3000 கிலோவரை (3.0 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் நெற்பயிர், நேரடி விதைப்பு மற்றும் நடவு என இருவேறு முறைகளுக்கும் ஏற்றதாக உள்ளது.
  • இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் குட்டையான வடிவில் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.
  2. 2.0 2.1 "Rice Knowledge Management Portal ASD 8". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_-_8_(நெல்)&oldid=3787771" இலிருந்து மீள்விக்கப்பட்டது