அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி


அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி , (பிறப்பு : 1 ஜனவரி 1959) ஒரு இந்திய நீதிபதி[1] மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாவார் .1985 ஆம் ஆண்டில் சட்டப் பட்டம் பெற்ற இவர் , செப்டம்பர் 6, 1985 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சேர்ந்தார் .அங்கு அவர் சிவில் மற்றும் அரசியலமைப்பு விஷயங்களில் அனுபவமானார்.[2]செப்டம்பர் 24, 2004 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ஆனார் . [2] ஆகஸ்ட் 18, 2005 இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கபட்டார் .அக்டோபர் 23 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 10 நவம்பர் 2018 அன்று, அவர் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். [3]17 நவம்பர் 2018 அன்று, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 11 நவம்பர் 2019 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

நீதியரசர்
அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி
CJ
சென்னை உயர் நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி
பதவியில்
11 நவம்பர் 2019 – 31 டிசம்பர் 2020
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முன்மொழிந்தவர் ரஞ்சன் கோகோய்
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
முன்னவர் விஜய தஹில் ரமணி
பின்வந்தவர் சன்ஜிப் பானர்ஜி
பாட்னா நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி
பதவியில்
17 நவம்பர் 2018 – 10 நவம்பர் 2019
ஆளுநர் லால்ஜி டாண்டன்
முன்மொழிந்தவர் ரஞ்சன் கோகோய்
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
முன்னவர் முகேஷ் ஷா
பின்வந்தவர் சஞ்சய் கரோல்
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின்நீதிபதி
பதவியில்
24 செப்டம்பர் 2004 – 16 நவம்பர் 2018
முன்மொழிந்தவர் ரமேஷ் சந்திர லஹோட்டி
நியமித்தவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1959 (1959-01-01) (அகவை 62)

மேற்கோள்கள்தொகு