அயிரி ஆறு

(அயிரியாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அயிரி ஆறு மைசூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. அயிரியாறு இக்காலத்தில் அரங்கி ஆறு என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இதனை இரண்டு சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. வடுகர் பெருமகன் ஆண்ட எருமை நன்னாட்டில் அயிரி ஆறு உள்ளது. [1] காட்டுமயில் பாகற்காயைத் தின்றுவிட்டு அயிரி ஆற்றங்கரையில் இருந்துகொண்டு வயிர் என்னும் யாழ் ஓசை போல் நரலுமாம். இந்த ஆற்றைத் தாண்டித் தமிழர் பொருளீட்டச் செல்வார்களாம். [2]

அடிக்குறிப்பு
தொகு
  1. வடுகர் பெரு மகன்,
    பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
    அயிரி யாறு இறந்தனர்ஆயினும், (அகநானூறு 253)

  2. பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
    கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
    அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
    காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும், (அகநானூறு 177)

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயிரி_ஆறு&oldid=2565932" இலிருந்து மீள்விக்கப்பட்டது