அயோலியாங்
அயோலியாங் ( Aoleang ) என்பது கொன்யாக் நாகா மக்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இது ஏப்ரல் முதல் வாரத்தில் முக்கியமாக இந்திய மாநிலமான நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் நடைபெறும்.[1]
பாரம்பரியம்
தொகுகொன்யாக் மக்கள் நாகாலாந்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 17 பழங்குடியினரில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள். மேலும் தலையை வேட்டையாடும் அவர்களின் கடந்தகால பாரம்பரியத்தின் காரணமாக மிகவும் பிரபலமானவர்கள். கொன்யாக் மக்கள் நாகாலாந்தின் மோன் பகுதியிலும், அண்டை நாடான மியான்மரிலும் காணப்படுகின்றனர். இந்த இடங்கள் அயோலியாங் திருவிழாவைக் காண சிறந்த இடங்களாக அமைகின்றன.
அயோலியாங் வசந்த வருகையை கொண்டாடுகிறது. மேலும், வரவிருக்கும் அறுவடைக்காக பிரார்த்தனையும் செய்யப்படுகிறது. கொண்டாட்டங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்படுகின்றன. இவை கொன்யாக் புத்தாண்டு தொடக்கத்துடன் ஒத்துப்போகின்றன. இருப்பினும், வரையறுக்கப்பட்ட அட்டவணை இல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் திருவிழா கொண்டாடப்படுவதால் தேதிகள் மாறலாம்.
ஹார்ன்பில் திருவிழா
தொகுமேலும் இதுநாகாலாந்தின் தலைநகர் கோகிமாவிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள கிசாமா பாரம்பரிய கிராமத்தில் வழக்கமாக டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெறும். ஹார்ன்பில் திருவிழாவிலிருந்து வேறுபடுகிறது.[2] நாகாலாந்தில் வாழும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானோர் உழவுத் தொழிலை நம்பியுள்ளனர். எனவே, அவர்களின் திருவிழாக்களும் உழவுத் தொழிலை அடிப்படையானவையாக இருக்கின்றன. இந்த மக்கள் திருவிழாக்களில் கலந்துகொள்வதை புனிதமாக கருதுகின்றனர்.[3] நாகாலாந்தில் உள்ள பல்வேறு பழங்குடியினரின் கலாச்சாரங்களைப் பாதுகாக்க சுற்றுலா மற்றும் கலை மற்றும் கலாச்சாரத் துறைகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை வேலைப்பாடுகளைக் கொண்ட ஓவியங்களும், சிலைகளும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பழங்குடியின மக்கள் தங்கள் நாட்டுப்புற பாடல்களை பாடியும், பாரம்பரிய நடனமாடியும், பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் மகிழ்கின்றனர்.[4]
நடைபெறும் நாட்கள்
தொகுஅயோலியாங் திருவிழாவின் முதல் 3 நாட்கள் ஹோய் லா நிய்ஹ், யின் மோக் ஃபோ நிய்ஹ் மற்றும் மோக் ஷேக் நிய்ஹ் என அழைக்கப்படுகின்றன.[5] இந்த நாட்களில் பாரம்பரிய துணிகளை நெய்தும், பலியிடப்படும் விலங்குகளை சேகரித்தும், திருவிழாவிற்கு உணவு மற்றும் அரிசி சாதம் தயாரித்தும் திருவிழாவிற்கு தயாராகிறது.
லிங்நியு நியா எனப்படும் நான்காவது நாள்விழாவில் மிக முக்கியமான நாள், இதில் கொன்யாக் பழங்குடியினர் அனைவரும் தங்கள் சிறந்த வண்ணமயமான பாரம்பரிய பழங்குடி ஆடைகள் மற்றும் நகைகளை அணிவார்கள். நான்காவது நாள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக நாள் முழுவதும் ஆடுவதும், பாடுவதும், சமூகமாக விருந்து வைப்பதுமாக, அவர்கள் ஆடும் பழங்குடியினரின் நடனங்கள் தலைமறைவாக இருந்த பழங்குடியினரின் வரலாற்றை அடையாளப்படுத்துகின்றன.
திருவிழாவின் இறுதி இரண்டு நாட்கள் லிங்க நிய் மற்றும் லிங்ஷான் நிய்ஹ் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நேரம் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கும், முழு கிராமத்தையும் மற்றும் தனிப்பட்ட வீடுகளையும் சுத்தம் செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ "Aoleang Monyu Festival of Nagaland" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-07-12.
- ↑ "Aoling Festival in Nagaland: The authentic, untouristy alternative to the Hornbill Festival" (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-07-14. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
- ↑ Hornbill Festival - Where the Action is... பரணிடப்பட்டது 2011-11-19 at the வந்தவழி இயந்திரம், EF News International. 16 November 2011.
- ↑ "Hornbill Festival 2015 - Hornbill Rock Contest". www.hornbillfestival.com. Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ "Experience Aoling Festival of the Konyak Tribe | Nagaland Tourism". www.thegreenerpastures.com. Archived from the original on 23 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.