அய்மாபதி சென்
அய்மாபதி சென் (Haimabati Sen) இந்தியாவைச் சேர்ந்த ஓரு மருத்துவர் ஆவார். அய்மாபதி கோசு என்ற இயற்பெயருடன் இவர் பிறந்தார்.
அய்மாபதி சென் Haimabati Sen | |
---|---|
பிறப்பு | அய்மாபதி கோசு 1866 குல்னா மாவட்டம், கிழக்கு வங்காளம் |
இறப்பு | 1932 அல்லது 1933 |
மற்ற பெயர்கள் | அய்மாபதி கோசு மித்ரா சென் |
பணி | மருத்துவர் |
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பெண்களின் வாழ்வில் வெளிச்சம் போட்ட அய்மாபதி சென் நினைவுகள் என்ற சுயசரிதை நூல் மதிப்புமிக்கதாகும். ஓர் அசாதாரண பெண்ணின் நினைவுக் குறிப்பு என்ற இந்நூலில், 19 ஆம் நூற்றாண்டு கிராமப்புற கிழக்கு வங்காளத்தில் 10 வயதில் குழந்தை விதவையாக இருந்து இறுதியாக மருத்துவராகும் வரை அளவிடமுடியாத நீண்ட பயணத்தின் நுணுக்கங்கள், திருப்பங்கள் ஆகியவற்றை விளக்குகிறது. இது குடும்பத்தினுள் உள்ள சிக்கலான மற்றும் முரண்பாடான உறவுகள், பாலின அடக்குமுறைகளின் பல்வேறு வடிவங்கள், சமூகத்தில் ஆணாதிக்க போக்குகளுக்கு எதிரான பேச்சுவார்த்தைகள் மற்றும் போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தை வடிவங்களில் உள்ள முரண்பாடுகள் மற்றும் சமரசங்களை வெளிப்படுத்துகிறது.
மருத்துவம் மற்றும் காலனித்துவ சமுதாயத்திற்கு இடையேயான இடைமுகத்தை பாலினத்தின் மூலம் இவரது புத்தகம் பகுப்பாய்வு செய்கிறது. இதுவரை பயன்படுத்தப்படாத முதன்மை ஆதாரங்களின் அடிப்படையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து வங்காளத்தில் மருத்துவமனை மருத்துவத்தின் வளர்ச்சியானது, பெண் நோயாளிகளுக்கு மேற்கத்திய சுகாதார சேவையை வழங்குவதற்கு சிறியதாக இருந்தாலும் - ஒரு இடத்தை உருவாக்கியது. காலனித்துவ அமைப்பைப் போலல்லாமல், மருத்துவமனை மருத்துவம் வருவதற்கு முன்பு பெண்கள் பெரும்பாலும் உள்நாட்டு சிகிச்சையின் பெண் பயிற்சியாளர்களால் சிகிச்சையளிக்கப்பட்டனர். இந்தப் புத்தகம் பெண்களுக்கான மருத்துவக் கல்வியின் வளர்ச்சியின் தொடர்புகள் மற்றும் இந்தியச் சீர்திருத்தவாதிகள் மற்றும் இந்த செயல்பாட்டில் பிரித்தானிய நிர்வாகிகளின் பங்கு ஆகியவற்றை ஆராய்கிறது. கையெழுத்துப் பிரதியில் இன பாகுபாடு, இனப்பெருக்க சுகாதார நடைமுறைகள், பாலியல் சுகாதாரம், பஞ்சம் மற்றும் இறப்பு மற்றும் மேற்கத்திய மருத்துவம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை பிரபலப்படுத்துவதில் பெண்கள் முகவர் மற்றும் பிற அமைப்புகளின் பங்கு உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகளைக் கையாள்கிறது. பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் காலனித்துவம், பாலினம் மற்றும் மருத்துவத்தின் அரசியல் பற்றிய நமது புரிதலை ஒரு புதுமையான வழியில் வளப்படுத்துகிறது.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுதற்போது வங்காள தேசத்தில் உள்ள கிழக்கு வங்காள மாகாணத்தின் குல்னா மாவட்டத்தில் அய்மாபதி கோசு என்ற இயற்பெயருடன் இவர் பிறந்தார். இவரது தந்தையார் சமீன்தார் , குலின் கயசுதா சாதியைச் சேர்ந்த பணக்கார உறுப்பினர் ஆவார். [1] மிக இளம் விதவையாக, இவர் பனாரசில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். தனது இரண்டாவது திருமணத்திற்கு பிறகு, இவர் கல்கத்தாவில் உள்ள காம்ப்பெல் மருத்துவக் கல்லூரியில் படித்தார். 1894 ஆம் ஆண்டு தனது வகுப்பில் முதலிடம் பெற்று தேர்ச்சியடைந்தார்.
ஊக்ளியில் உள்ள லேடி டஃபெரின் மகளிர் மருத்துவமனையில் 1894 முதல் 1910 ஆம் ஆண்டு வரை [2] சென் பணி புரிந்தார். சின்சுராவில் ஒரு தனியார் பயிற்சியையும் பெற்றுக் கொண்டிருந்தார், 1930 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இவர் இறக்கும் வரை. 1920 ஆம் ஆண்ட்டின் ஒரு "மதிப்புமிக்க" [1] நினைவு நாட் குறிப்பை எழுதினார். தனது சொந்தப் போராட்டங்களையும் மற்றும் அனைத்து இளம் பெண்களுக்கும் இவரது கவலையையும் இதில் விவரித்தார்: "ஒரு பெண்ணாக இருப்பதால் நான் இதையெல்லாம் அனுபவிக்க வேண்டுமா? ஒரு மனிதனுக்கு இவ்வளவு துன்பத்தை யாராவது கொடுத்திருப்பாரா? நான் யாருடைய மனைவி அல்லது யாருடைய மகள் என்று அவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள்? " [1] இவரது நினைவு நாட்குறிப்பு வங்காள மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2000 ஆமவது ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅய்மாபதி கோசு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் திருமணம் அவருடைய 9 ஆவது வயதில் நடந்தது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக வாழ்ந்த மனைவியை இழந்த ஒருவருக்கு இரண்டாம் தாரமாக இவருக்கு திருமணம் நடந்தது. ஓர் ஆண்டு கழித்து, இவரும் ஒரு குழந்தை விதவை. கணவர், பெற்றோர், சகோதரர்கள் அல்லது மாமியார் ஆதரவின்றி, இவர் பானாரசில் உள்ள ஒரு வீட்டில் வாழ்ந்தார். 1890 ஆம் ஆண்டு இவர் மீண்டும் குஞ்சபகாரி சென் என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு மொத்தமாக ஐந்து குழந்தைகள் இருந்தனர். அய்மாபதி சென் 1932 (அல்லது 1933), [3] ஆம் ஆண்டு தனது அறுபதுகளில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Sen, Indrani (2012). "Resisting Patriarchy: Complexities and Conflicts in the Memoir of Haimabati Sen". Economic and Political Weekly 47 (12): 55–62; quotes from pages 55 and 57. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/23214502.Sen, Indrani (2012). "Resisting Patriarchy: Complexities and Conflicts in the Memoir of Haimabati Sen". Economic and Political Weekly. 47 (12): 55–62, quotes from pages 55 and 57. ISSN 0012-9976. JSTOR 23214502.
- ↑ "Book on India's premier women doctors". The Hans India (in ஆங்கிலம்). 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2020-10-19.
- ↑ "Haimabati Ghosh Mitra Sen". Oxford Reference (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-19.