அய்யத்தான் ஜானகி அம்மாள்

கேரளாவின் முதல் மலையாளி பெண் மருத்துவர், கேரளாவின் முதல் பெண் மருத்துவர்.

அய்யத்தான் ஜானகி அம்மாள் (Ayyathan Janaki Ammal ) (1881-1945) இவர் கேரளாவின் முதல் பெண் மருத்துவர் ஆவார் [1] கேரளா இந்தியாவில் பிரிட்டிசார் ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் நிர்வாக மாவட்டமாக இருந்தது. இவர் திய்யர் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவராகவும், கேரளாவின் சமூக சீர்திருத்தவாதி, சுகனவர்தினி இயக்கத்தின் நிறுவனரும் மற்றும் கேரளாவில் பிரம்ம சமாஜத்தின் தலைவரும் பிரச்சாரகருமான அய்யத்தான் கோபாலனின் சகோதரியாவார்.

மருத்துவர்
அய்யத்தான் ஜானகி அம்மாள்
അയ്യത്താൻ ജാനകി അമ്മാൾ
தாய்மொழியில் பெயர்അയ്യത്താൻ ജാനകി അമ്മാൾ
பிறப்புஅய்யத்தான் ஜானகி
1881
தலச்சேரி சேட்டம்குன்னு
இறப்பு1945
சென்னை
கல்லறைஅய்யத்தான் குடும்பக் கல்லறை
தேசியம்இந்தியன்
கல்விமதராசு மருத்துவக் கல்லூரி
படித்த கல்வி நிறுவனங்கள்மதராசு மருத்துவக் கல்லூரி
பணிமருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவப் பள்ளி விரிவுரையாளர்
அறியப்படுவதுகேரளாவின் முதல் பெண் மருத்துவர், முதல் மலையாள பெண் மருத்துவர்
உறவினர்கள்அய்யத்தான் கோபாலன் , அய்யத்தான் குஞ்ஞிராமன், அய்யத்தான் மாதவி

சுயசரிதை

தொகு

தலச்சேரியின் சேட்டம்குன்னு, புலப்பாடி இல்லத்தின் (மலபாரின் பிரபுத்துவ திய்யர் குடும்பம்) அய்யத்தான் குடும்பத்தில் பிறந்தார். அய்யத்தான் சந்தன், கல்லத்து சிறுத்தம்மாள் ஆகியோருக்கு அய்யத்தான் கோபாலன், அய்யத்தான் குஞ்ஞிராமன், அய்யத்தான் மாதவி ஆகியோருக்குப் பிறகு இவர் பிறந்தார்.

இவர் தலச்சேரி தொடக்கப்பள்ளியில் படித்தார். 1897 இல் கோழிக்கோட்டில் இருந்த ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு சென்றார். பின்னர் 1902 ஆம் ஆண்டில் மதராசு மருத்துவக் கல்லூரியில் உதவித்தொகையுடன் சேர்ந்தார். மேலும், 1907 ஆம் ஆண்டில் துணை உதவி அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்த தரவரிசை, கௌரவம் ஆகியவற்றுடன் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டு இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அரசு சேவையில் சேர்ந்தார். அங்கு உதவி அறுவை சிகிச்சை நிபுணராகவும் மருத்துவராகவும் இவரது தொழில் தொடங்கியது. இவர் மீண்டும் கோழிக்கோடு திரும்பி தொழுநோய் மருத்துவமனையில் பணியில் சேர்ந்து, இங்கு பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், இவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் பணி புரிந்தார்.

சமூக ஆர்வலர்

தொகு

ஜானகி அம்மாள் சேவை எண்ணம் கொண்ட ஒரு சமூக ஆர்வலர் ஆவார். சமுதாயத்தின் நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களையும் மக்களையும் மேம்படுத்துவதற்காக இவர் சுகனவர்தினி இயக்கத்துடன் இணைந்து பணியாற்றினார். கோழிகோட்டில் பணிபுரிந்தபோது தனது சகோதரர் அய்யத்தான் கோபாலனுடன் சேர்ந்து, கல்லத்து கௌசல்யா அம்மாள் (கோபாலனின் மனைவி), மந்தாகினி பாய் தேவதத் (அய்யத்தான் தேவதத்தின் மனைவி (அ. கோபாலனின் 3 வது மகன்) ஆகியோருடன் சேர்ந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தினார்.

சுகனவர்தினி இயக்கத்தில் பெண்கள் உரிமைகளுக்காக போராடுவதில் முன்னோடியாக ஜானகி அம்மாள் கருதப்படுகிறார்.

இறப்பு

தொகு

இவர் 1945 இல் தனது இறந்தார். [2]

குறிப்புகள்

தொகு
  1. Modern Kerala: Studies in Social and Agrarian Relations ,K.K.N.Kurup. p. 86. K.K.N.Kurup. p. 86. mittal publications. 1988. pp. K.K.N.Kurup. p. 86.
  2. Ente ammayude ormadaykk (Biography of Kallat Chirutha Ammal) written by Dr. Ayyathan Gopalan in the 1930