அய்யாலராஜு இராமபத்ருடு

அய்யாலராஜு இராமபத்ருடு ( Ayyalaraju Ramabhadrudu ) ( தெலுங்கு : అయ్యలరాజు రామభద్రుడు) சுருக்கமாக இராமபத்ரன் (பொது ஊழி 16வது நூற்றாண்டு ) ஒரு பிரபலமான தெலுங்குக் கவிஞரும் விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனின் அரசவையிலிருந்த அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகவும் இருந்தார்.

சுயசரிதை தொகு

காவலி வெங்கட ராமசாமி என்பவரின் கருத்துப்படி, இவர் சிடெட் மாவட்டங்களைச் சேர்ந்தவர். [1] இவரது பிறப்பிடம் ஆந்திராவில் கடப்பா என்று பரவலாகக் கருதப்படுகிறது. இவர் முதலில் கிருஷ்ணதேவராயரானால் ஆதரிக்கப்பட்டார். பின்னர் அவரது மரணத்திற்குப் பிறகு அலிய ராம ராயனின் மருமகன் கோபுரி நரசராயனின் அரசவைக்குச் சென்றார். இவர் "பிள்ளாள இராமபத்ருடு" என்றும் அழைக்கப்பட்டார்.

படைப்புகள் தொகு

இராமாப்யுதயமு என்ற தனது புகழ்பெற்ற படைப்பை நரசராயனுக்கு அர்ப்பணித்தார். கிருஷ்ணதேவராயனின் வேண்டுகோளின் பேரில், மன்னனின் ஒரு படைப்பை தெலுங்கில் சகல கதா சார சங்கிரகம் என்று மொழிபெயர்த்தார் .

மேற்கோள்கள் தொகு

  1. Ramabhadra in Biographical Sketches of Dekkan Poets. Calcutta: Cavelly Venkata Ramaswamie. 1829. p. 109. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யாலராஜு_இராமபத்ருடு&oldid=3149403" இலிருந்து மீள்விக்கப்பட்டது