அஷ்டதிக்கஜங்கள்

அஷ்டதிக்கஜங்கள் ( Ashtadiggajas ) என்பது பொது ஊழி 1509 முதல் 1529 வரை விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ணதேவராயனின் அரசவையில் இடம்பெற்றிருந்த எட்டு தெலுங்கு அறிஞர்கள் மற்றும் கவிஞர்களுக்கு வழங்கப்பட்ட பெயராகும். இவரது ஆட்சியின் போது, தெலுங்கு இலக்கியமும் கலாச்சாரமும் அதன் உச்சத்தை எட்டின. இவரது அரசவையில், எட்டு கவிஞர்கள் இவரது இலக்கிய சபையின் எட்டு தூண்களாக கருதப்பட்டனர். அஷ்டதிக்கஜங்களின் காலம் "பிரபந்தங்களின் காலம்" ( தெலுங்கு இலக்கியத்தின் காலம் ) என்று அழைக்கப்படுகிறது. [1] இந்த அவையில் இடம்பெற்ற அனைவருமே குறைந்தது ஒரு காவியங்களையாவது இயற்றியிருந்தார்கள். இவர்கள் பிரபந்தத்திற்கு அதன் தற்போதைய வடிவத்தை வழங்கினார்கள். [2] இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்றைய ஆந்திர மாநிலத்தின் (இராயலசீமை) தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அல்லசாணி பெத்தண்ணா, துர்ஜாதி, நந்தி திம்மண்ணா, மாதையாகாரி மல்லண்ணா, அய்யாலராஜு ராமபத்ருடு ஆகியோர் இராயலசீமையைச் சேர்ந்தவர்கள். தெனாலி ராமகிருஷ்ணன் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இராமராஜ பூஷன் என்பவரும் இதில் இடம் பெற்றிருந்தார்.

கிருஷ்ணதேவராயன் அரசவையின் அஷ்டதிக்கஜங்கள்

சொற்பிறப்பியல்

தொகு

அஷ்டதிக்கஜங்கள் (அஷ்ட + திக் + கஜா) என்ற தலைப்பு "எட்டு திசைகளின் யானைகள்" என்று பொருள். எட்டு யானைகள் பூமியை எட்டு திசைகளில் காத்து நிற்கின்றன என்ற பழைய இந்து நம்பிக்கையை இது குறிக்கிறது, அதாவது ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனை, புஷ்பதந்தா, சர்வபௌமா, சுப்ரதீகா, இவர்களின் மனைவிகள் அப்ரா, கபிலா, பிங்கலா, அனுபமா, தாமரபந்தி, சுப்ரதந்தி, அங்கனா, அஞ்சனாவதி. கவிஞர்களின் அரசவைக் குழு "புவன விஜயம்" (உலக வெற்றி) என்றும் அழைக்கப்பட்டது. [3] [4]

உறுப்பினர்கள்

தொகு

அஷ்டதிக்கஜங்களில் இடம்பெற்ற கவிஞர்கள்:

பல பாராட்டப்பட்ட படைப்புகளை எழுதிய தெனாலி ராமகிருஷ்ணன் [5] "தெனாலி ராமன்" என மிகவும் புகழ் பெற்றவராக இருந்தார்.

கூடுதல் தகவல்கள்

தொகு

மேலே பட்டியலிடப்பட்ட எட்டு கவிஞர்கள் அஷ்டதிக்கஜங்கள் என்று பரவலாகக் கருதப்பட்டாலும், இவர்களை யார் சரியாக அமைத்தார்கள் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. சில இலக்கியப் படைப்புகள் இராமராஜ பூஷனுக்குப் பதிலாக பட்டு-மூர்த்தியின் என்ற பெயரைக் குறிப்பிடுகின்றன. மேலும் சில கணக்குகளில் பிங்கலி சூரண்ணாவும் தெனாலி இராமகிருஷ்ணனும் பிற்கால பேரரசர்களின் அவை உறுப்பினர்களாக குறிப்பிடுகின்றனர். அக்கால கல் கல்வெட்டுகளிலிருந்து, இன்றைய கடப்பா மாவட்டத்தில் உள்ள திப்பளூர் கிராமம் சக்கரவர்த்தியால் அஷ்டதிக்கஜங்களுக்கு வழங்கப்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது.

படைப்புகள்

தொகு
  • கிருஷ்ணதேவராயனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட "மனு சம்பவம்" என்ற காவியத்தை அல்லசாணி பெத்தண்ணா எழுதினார்.
  • நந்தி திம்மண்னா "பாரிஜாதாபஹரணம்" என்பதை எழுதி கிருஷ்ணதேவராயனுக்கு அர்ப்பணித்தார்.
  • மாதையாகாரி மல்லண்ணா "ராஜசேகர சரித்திரமு" என்ற நூலை எழுதினார்.
  • துர்ஜாதி "காலஹஸ்தி மகாத்யமு" என்ற நூலை எழுதினார்.
  • அய்யாலராஜு ராமபத்ருடு "இராமாப்யுதாயமு" என்ற நூலை எழுதினார்.
  • இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டையும் விவரிக்கும் இரட்டைப் படைப்பான "இராகவபாண்டவீயமு" என்பதை பிங்கலி சூரண்ணா எழுதினார்.
  • இராமராஜ பூஷன் "காவ்யலங்கரசங்கிரகாமு", வசுசரித்திரமு", அரிச்சந்திரநளோபாக்யனமு" என்ற நூல்களை எழுதினார். * * தெனாலி இராமகிருஷ்ணன் "உத்பதராத்யா சரித்திரமு", "பாண்டுரங்க மகாத்யாமு", "கடிகாச்சல மகாத்மியமு" ஆகியவற்றை எழுதினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Prabandhamulu". Microsoft. Archived from the original on 11 February 2008.
  2. Adluri, Seshu Madhava Rao (1998). "aShTadiggajamulu (Introduction)". mun.ca. Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  3. Legend in Vaishnavites about Eight elephants. One such mentioning of elephants is that Hiranayakasipu sent eight elephants carrying earth to kill Prahlada.
  4. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 71.
  5. Like the Nine gems of King Vikramaditya's court, the Ashtadiggajas of Krishnadevara's court are famous in legend, K.A. Nilakanta Sastry, History of South India, From Prehistoric times to fall of Vijayanagar, 1955, OUP, (Reprinted 2002), p372

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டதிக்கஜங்கள்&oldid=3542314" இலிருந்து மீள்விக்கப்பட்டது