பிங்கலி சூரண்ணா

பிங்கலி சூரண்ணா (Pingali Suranna) ( பொ.ச. 16 ஆம் நூற்றாண்டு ) இவர் ஓர் தெலுங்கு கவிஞரும், அஷ்டதிகஜர்களில் ஒருவருமாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சூரண்ணாவின் சரியான பிறப்பிடம் நிச்சயமற்றது. நந்தியாலாவுக்கு அருகிலுள்ள கனலா கிராமத்தில் வசித்து வந்தார். [1] [2]

சூரண்ணாவின் பெற்றோர் அபமாம்பா (தாய்) மற்றும் அமரனா (தந்தை), இருவரும் அறிஞர்கள் ஆவர். கிருட்டிணா மாவட்டத்தில் விஜயநகர பேரரசு என்ற ஒரு படைப்பை நந்தியால் கிருட்டிண இராஜுவுக்கு சூரண்ணா அர்ப்பணித்தார். இவர் நந்தியாலுக்கு அருகிலுள்ள கனாலா கிராமத்தைச் சேர்ந்தவரென்றும், நந்தியாலா மற்றும் கர்னூல் மாவட்டத்தின் கொயிலகுந்த்லா சாலையைச் சேர்ந்தவர் என்பது இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. இவருடைய சமாதி இங்கே இருக்கிறது. பாட்டர் சமூகம் அவரது ஜெயந்தியை ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. கனாலாவில் ஒரு பழைய ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியும் உள்ளது. இது பிங்கலி சூரண்ணாவின் மரபு என்று கூறப்படுகிறது. நந்தியால், சுரானா சரசுவத சங்கம் என்பது 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இலக்கிய அமைப்பாகும். பயிற்சி பெற்ற மருத்துவர் ஜி. சகாதேவுடு, ஓய்வு பெற்ற ஆசிரியரான கோட்டிமுக்கலா சுப்ரமண்ய சாஸ்திரி மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியரான கொடுரி சேசபானி சர்மா ஆகியோர் முறையே தலைவர், செயலாளர் மற்றும் இந்த அமைப்பின் இணை செயலாளர் ஆவர்.

இலக்கியப் படைப்புகள் தொகு

1500 ஆம் ஆண்டில் சூரண்ணா, கருட புராணம், பிரபாவதி பிரதியும்மு, இராகவ பாண்டவ்யம் மற்றும் கலாபூர்ணோதயாமு ஆகியவற்றை எழுதினார். இவர் கருட புராணத்தை தனது தந்தைக்கும், கலாப்பூர்ணோதயத்தை நந்தியால் மன்னருக்கும் அர்ப்பணித்தார்.

பிரபாவதி பிரதியும்மு மற்றும் கலாபூர்ணோதயமு ஆகியவற்றை வெல்செரு நாராயண ராவ் மற்றும் தாவீது சல்மான் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். கலாபூர்ணோதயாமுவின் மொழிபெயர்ப்பான தி சவுண்ட் ஆஃப் தி கிஸ், அல்லது தி ஸ்டோரி, ஒருபோதும் சொல்லப்படக்கூடாது, என்பதை கொலம்பியா யுனிவர்சிட்டி அச்சகம் 2002 இல் வெளியிட்டது. [3] பிரபாவதி பிரதியும்முவின் மொழிபெயர்ப்பான, தி டெமான்ஸ் டாட்டர்: எ லவ் ஸ்டோரி பிரம் சவுத் இன்டியா என்பதை நியூ யார்க் அரசுப் பல்கலைக்கழக அச்சகம் 2006 இல் வெளியிடப்பட்டது. [4] [5]

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கலி_சூரண்ணா&oldid=3360372" இருந்து மீள்விக்கப்பட்டது