அரசவால் ஈபிடிப்பான்

இந்திய அரசவால் ஈபிடிப்பான் ஆசியாவினைத் தாயகமாக கொண்ட பறவை
(அரசவால் ஈப்பிடிப்பான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய அரசவால் ஈபிடிப்பான்
இலங்கையில் ஆண் குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: மோனார்க்கிடே
பேரினம்: தெர்ப்சிபோன்
இனம்: தெ. பரதிசி
இருசொற் பெயரீடு
தெர்ப்சிபோன் பரதிசி
(கரோலஸ் லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்

தெசித்ரே பரதிசி

இந்திய அரசவால் ஈபிடிப்பான் (Indian paradise flycatcher) அல்லது வேதிவால் குருவி[2] (Terpsiphone paradisi)[3][4] என்பது நடுத்தர அளவிலான ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவையாகும். ஆண் பறவை நீளமான வாலுடன் காணப்படும். இவற்றில் சில கருப்பு மற்றும் செந்நிற இறகுகளுடனும், சில வெண்நிற சிறகுடனும் காணப்படும். பெண் பறவைகள் குறுகிய வாலுடனும் செந்நிற இறக்கைகளுடனும் கருப்பு நிற தலையுடனும் காணப்படும். இவை பூச்சிகளை அடர்த்தியான மரங்களின் கீழே பறக்கும்போது பிடித்து உண்ணும். இப்பறவை மத்தியப் பிரதேச மாநிலப்பறவையாகும்.

பரவலும் வாழிடமும் தொகு

இந்திய அரசவால் ஈபிடிப்பான் புலம்பெயரும் பறவையாகும். இவை வெப்பமண்டல ஆசியாவில் குளிர்காலத்தை செலவிடுகிறது. தென்னிந்தியா மற்றும் இலங்கையில், இனப்பெருக்கம் செய்கின்றன.[5][6] மத்திய ஆசியாவிலிருந்து தென்கிழக்கு சீனா, நேபாளம், இந்தியா முழுவதும் மற்றும் இலங்கை மற்றும் மியான்மர் வரை அடர்ந்த காடுகள் மற்றும் நன்கு மரங்கள் நிறைந்த வாழ்விடங்களில் இந்திய அரசவால் ஈபிடிப்பான் பறவைகள் வாழ்கின்றன.[7]

படத்தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Terpsiphone paradisi". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. வேதிவால் குருவியைத் தேடி.., கட்டுரை, ஜென்ஸி டேவிட், இந்து தமிழ் (நாளிதழ்), 2021 சனவரி 16
  3. http://ebird.org/content/india/news/2015-taxonomy-indian-birds:/[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://www.birds.cornell.edu/clementschecklist/2015-updates-corrections/
  5. Hugh Whistler (1933). "The migration of the Paradise Flycatcher, (Tchitrea paradisi)". Journal of the Bombay Natural History Society 36 (2): 498–499. 
  6. Bates, R. S. P. (1932). "Migration of the Paradise Flycatcher Tchitrea paradisi". Journal of the Bombay Natural History Society 35 (4): 896–897. 
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; iucn என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேலதிக வாசிப்பு தொகு

  • Lewis, W.A.S. (1942) The Indian Paradise Flycatcher Tchitrea paradisi paradisi (Linn.). Some notes on a colony breeding near Calcutta. Journal of the Bengal Natural History Society 17 (1): 1–8.
  • Inglis, C.M. (1942) The Indian Paradise Flycatcher Tchitrea paradisi paradisi (Linn.). Journal of the Bengal Natural History Society 17 (2): 50–52.
  • Salomonsen, F. (1933). "Revision of the group Tchitrea affinis Blyth.". Ibis 75 (4): 730–745. doi:10.1111/j.1474-919X.1933.tb03360.x. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசவால்_ஈபிடிப்பான்&oldid=3874020" இலிருந்து மீள்விக்கப்பட்டது