அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்
அரசு மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம் (Government College for Women) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3] தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[4][5] இக்கல்லூரி பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் தரச்சான்று பெற்ற கல்லூரி ஆகும். இக்கல்லூரி மொத்தமாக 3.75 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[6] முனைவர் க. கீதா தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[7]
குறிக்கோளுரை | முன்னேற்றத்திற்கான கல்வி |
---|---|
வகை | அரசு, மகளிர், கலை, அறிவியல் கல்லூரி |
உருவாக்கம் | 1995 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | முனைவர் க. கீதா |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://gacwrmd.org |
வழங்கும் படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுநிலை படிப்புகள்
தொகு- கணினி அறிவியல்
- கணிதம்
இளநிலைப் படிப்புகள்
தொகு- தமிழ்
- வேதியியல்
- வணிகவியல்
- மின்னணுவியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- இளங்கலை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தினமலர் கல்விமலர்
- ↑ Colleges in Tamil Nadu
- ↑ சிவகங்கை மாவட்ட கல்லூரிகள்
- ↑ Affiliated-colleges of Alagappa University
- ↑ "அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.
- ↑ "3.75 ஏக்கரில் செயற்பட்டுவரும் இராமநாதபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.
- ↑ "இராமநாதபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.