அரசியல் பொருளாதாரம்

அரசியல் பொருளாதாரம் (political economy) என்பது அரசு, சட்டம், விதிகள் ஆகியவற்றிற்கும் உற்பத்தி, வணிகம் அவற்றிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியும் தேசிய உற்பத்தி, செல்வத்தைப் பகிர்வது பற்றியும் ஆராய்கின்றது. அரசியல் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகள் ஆங்கில அறிஞர்களான ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ, மால்தசு ஆகியோரிடமிருந்து தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொருளாதாரம் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்படத் தொடங்கியது.[1] அரசியல் பொருளாதாரம் என்பது பொலிடிகல் எகானமி (political economy) என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பாக அமைகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Steiner (2003), pp. 61–62இ

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசியல்_பொருளாதாரம்&oldid=3704578" இலிருந்து மீள்விக்கப்பட்டது