அரசு அபின் மற்றும் காரப்போலி தொழிற்சாலைகள் (இந்தியா)
அரசு அபின் மற்றும் காரப்போலி தொழிற்சாலைகள் இந்தியாவில் மருத்துவ தேவைக்காக அரசு அபின் மற்றும் மார்ஃபீன் போன்ற வலி நீக்கி மருந்துகளை தொழிற்சாலைகள் (GOAF) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த கண்காணிப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் கீழ் இயங்குகிறது[1]. இந்த துறையின் கீழ் காசீப்பூர் நகரம் (உ பி) மற்றும் நீமச் (ம பி) நகரங்களில் அரசு அபின் மற்றும் காரப்போலி தொழிற்சாலைகள் இயங்குகிறது.
தயாரிப்புகள்
தொகுநிறுவனத்தின் மேற்படி இரண்டு தொழிற்சாலைகள் கசகசா செடிகளிலிருந்து அபின் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரப்போலிகள் எனும் ஆல்கலாய்டுகளில் உள்ள கோடீன் பாஸ்பேட்ஸ், மார்பின் உப்புகள், டியோனைன், மார்பின் ஹைட்ரோகுளோரைடு, தீபைன் போன்ற வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்து[2], மருத்துவப் பயன்பாட்டிற்கு அபின் மற்றும் உற்பத்தி செய்கிறது.[3]
தொழிற்சாலைக்கான கசகசா சாகுபடி
தொகுதொழிற்சாலைகளுக்கு தேவையான இடுபொருட்களான கசகசா செடிகளை இந்தியாவில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து உரிமம் பெற்ற கசகசா செடி சாகுபடியாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. [4]முழு விளைபொருளும் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, அரசு அபின் மற்றும் காரப்போலி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. அங்கு கசகசாவை பதப்படுத்தி, அபின் மற்றும் மார்ஃபீன் போன்ற வலி நீக்கி மருந்துகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முன்னணி வகிக்கிறது.[3] . 2017ஆம் ஆண்டில், இந்திய அரசு நாட்டில் கசகசா பயிரிடுதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றை தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது. 2 எக்டேர் நிலத்தில் கசகசாவை பயிரிடவும், செறிவூட்டப்பட்ட கசகசா ஸ்ட்ரா (CPS) எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரத்தைப் பிரித்தெடுக்க வரையறுக்கப்பட்ட தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.).[5]
அபின் & அல்கலாய்டு தொழிற்சாலைகள்
தொகு- அரசு அபின் மற்றும் அல்கலாய்டு தொழிற்சாலை, காசீப்பூர், உத்தரப் பிரதேசம்
- அரசு அபின் மற்றும் அல்கலாய்டு தொழிற்சாலை, நீமச், மத்தியப் பிரதேசம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Doctor, Vikram. "Union Budget 2012: Opium trade tucked away among the budget papers". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/economy/policy/union-budget-2012-opium-trade-tucked-away-among-the-budget-papers/articleshow/12309921.cms.
- ↑ V.S. Ramanathan, P. Chandra. Recovery of thebaine and cryptopine from Indian opium (UNODC)
- ↑ 3.0 3.1 "Particulars of the organisation, its functions and duties" (PDF). (14.1 KB) (Government of India)
- ↑ Datta, PT Jyothi. "Centre pilots private poppy cultivation and extraction of opium with new technology". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ "Central govt opens doors for private players in opium cultivation". The Indian Express (in ஆங்கிலம்). 2018-05-08. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.