நீமச்
நீமச், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் நீமச் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரம் அதன் வடகிழக்கு எல்லையை ராஜஸ்தான் மாநிலத்துடன் பகிர்ந்து கொள்கிறது மற்றும் இது நீமச் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாகும். முன்பு குவாலியர் சுதேச அரசின் பாசறை நகரமாக திகழ்ந்தது. பின்னர் 1932 ஆம் ஆண்டில் பிரித்தானிய பாசறை கலைக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த நகரம் பிரித்தானிய நகராட்சி வாரியத்தால் பராமரிக்கப்பட்டது.
பெயரின் தோற்றம்
தொகுநீமச் நகரைச் சுற்றி அதிக எண்ணிக்கையிலான வேப்பமரங்கள் காணப்படுவதால் இந்த நகரம் அதன் பெயரைப் பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு. அதே நேரத்தில் இந்த நகரத்தின் முதல் மக்கள் மீனா சாதியைச் சேர்ந்தவர்கள், இது "மீனச்" என்ற பெயருக்கு வழிவகுத்ததாகவும் இது காலப்போக்கில் நீமுச் ஆனதாகவும் கருதப்படுகின்றது. இருப்பினும் "நிமாச்" என்பது "வட இந்தியா மவுண்டட் பீரங்கி மற்றும் குதிரைப்படை தலைமையகம்" என்பதன் சுருக்கமாகும்.[சான்று தேவை]
புள்ளிவிபரங்கள்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி நீமச்சில் 127,000 மக்கள் வசிக்கின்றனர்.[1] சனத்தொகையில் ஆண்கள் 53% வீதமும், பெண்கள் 47% வீதமும் காணப்படுகின்றனர். நீமுச்சின் சராசரி கல்வியறிவு விகிதம் 85% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் எழுத்தறிவு 77% வீதமும், பெண் எழுத்தறிவு 62% வீதமுமாக காணப்படுகின்றது. நீமச்சில் 14% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
2011 ஆம் ஆண்டின் சனத் தொகை கணக்கெடுப்பின்படி, நீமுச் மாவட்டத்தின் மக்கட் தொகையில் 70.31% வீதமானோர் கிராமப்புறங்களிலும், 29.69% வீதமானோர் நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர்.[2]
அமைவிடம்
தொகுநீமச் மாவட்டம் உஜ்ஜைன் பிரிவின் ஒரு பகுதியாகும். நீமச் மாவட்டம் மேற்கு மற்றும் வடக்கு எல்லையாக ராஜஸ்தானையும் , கிழக்கு மற்றும் தெற்கு எல்லையாக மண்டசௌர் மாவட்டத்தையும் கொண்டுள்ளது. இது 1998 ஆம் ஆண்டு 30 அன்று மாண்ட்சூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்த நகரம் நீமச் நகரம், சவானி, பாகானா ஆகிய மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நீமச் மாவட்டத்தில் 2001 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 956,000 மக்கள் வசிக்கின்றனர்.
பொருளாதாரம்
தொகுநீமுச்சின் உள்ளூர் பொருளாதாரம் முக்கியமாக விவசாய உற்பத்தி சந்தையை அடிப்படையாகக் கொண்டது. (இந்தியில் கிருஷி உபாஜ் மண்டி என்று அழைக்கப்படுகிறது) விவசாய பொருட்களின் வருகையைப் பொறுத்தவரை எம்.சி.எக்ஸ் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் 2011 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாகவும், ஆசியாவின் மிகப் பெரிய உற்பத்தி சந்தையாகவும் காணப்படுகின்றது. நீமுச்சின் விவசாய சந்தையில் பல வகையான தானியங்கள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், எண்ணெய் விதைகள் மற்றும் மூலிகைகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன. நீமுச் இந்தியாவில் உள்ள மூலிகைகளின் முக்கிய வர்த்தக மையமாகும். இது உலகில் அஸ்வகந்த வேர்களின் (இந்திய ஜின்ஸெங், விதானியா சோம்னிஃபெரா) ஒரே ஏலம் மற்றும் வர்த்தக மையமாகும். 500 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைகள் நீமுச்சில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. நாட்டில் அபின் அதிக அளவில் உற்பத்தி செய்யும் இடங்களில் நீமுச் மாவட்டமும் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள ஒரே இரண்டு அபின் தொழிற்சாலைகளில் ஒன்று நீமுச்சில் அமைந்துள்ளது. நீமுச் மாவட்டத்தின் காலநிலை அபின் உற்பத்திக்கு ஏற்றது. இதனால் அபின் இப்பகுதியில் பயிரிடப்படும் முக்கிய பயிர்களில் ஒன்றாகும். ஆரஞ்சு, எலுமிச்சை, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் மற்றும் ஏராளமான மூலிகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
போக்குவரத்து
தொகுஇங்கு தொடருந்து நிலையம் உள்ளது.[3] இங்கு பயணியர் வண்டிகளும், விரைவுவண்டிகளும் நின்று செல்கின்றன.
அரசியல்
தொகுஇந்த நகரம் நீமச் சட்டமன்றத் தொகுதிக்கும், மண்டுசவுர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4].
சான்றுகள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Population Size and Growth Rate" (PDF). Archived from the original (PDF) on 2014-03-11.
- ↑ [1] Neemuch Railway station
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-29.