நீமச் மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

நீமச் மாவட்டம் (Neemuch district) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் நீமச் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.

நீமச் மாவட்டம்
नीमच जिला
நீமச்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்உஜ்ஜைன் கோட்டம்
தலைமையகம்நீமச்
பரப்பு4,256 km2 (1,643 sq mi)
மக்கட்தொகை826,067 (2011)
மக்கள்தொகை அடர்த்தி194/km2 (500/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை29.69%
படிப்பறிவு70.80
பாலின விகிதம்954
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 79
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

வடக்கில் இராஜஸ்தான், கிழக்கிலும், தெற்கிலும் மண்டசௌர் மாவட்டம் எல்லைகளாக கொண்டது நீமச் மாவட்டம்.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் நீமச், ஜிரான், ஜாவத் மற்றும் மானசா என நான்கு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது.

அரசியல்

தொகு

இம்மாவட்டம் மானாசா, நீமச், மற்றும் ஜாவத் என மூன்று சட்டமன்ற தொகுதிகளையும்; மக்களவைத் தொகுதியை மண்டசௌர் மாவட்டத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

பொருளாதாரம்

தொகு

அபின் உற்பத்தியில் இம்மாவட்டம் முன்னிலையில் உள்ளது. மேலும் எண்ணெய் வித்துக்களும் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆசியாவின் பெரிய 151 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரியசக்தி ஆலை 750 ஏக்கரில், பிப்ரவரி 2014 முதல் இம்மாவட்டத்தில் செயல்படுகிறது.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 826,067 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.31% மக்களும்; நகரப்புறங்களில் 29.69% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 13.77% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 422,653 ஆண்களும் மற்றும் 403,414 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 954 பெண்கள் வீதம் உள்ளனர். 4,256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 194 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.80% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.91% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.13% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 107,384 ஆக உள்ளது. [1]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 741,288 (89.74 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 67,324 (8.15 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்

தொகு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீமச்_மாவட்டம்&oldid=3369761" இலிருந்து மீள்விக்கப்பட்டது