அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்

அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம் (Government college of Education–Komarapalayam), தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இணைவு பெற்றுள்ள அரசுக் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயல்பட்டு வருகின்றது[2]

அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்
வகைஅரசினர் கல்வியியல் கல்லூரி
உருவாக்கம்1955
சார்புதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை
அமைவிடம், ,
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வியியல் கல்வி அளிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரி 1955 இல் தொடங்கப்பட்டு முதலில் ஆண்கள் மட்டும் பயிலும் வகையில் தொடங்கப்பட்டு 1990 முதல் இருபாலரும் பயிலும் கல்லூரியாக உள்ளது[3]

வரலாறு தொகு

கல்லூரியின் பெயர்: தொகு

அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம் . அரசாணை (பலவகை) எண் 1117 நாள் 23.06.1955 இன் படி அரசினர் பயிற்சிக் கல்லூரி (Government Training College) என்ற பெயரில் ஆண்கள் மட்டும் பயிலும் வகையில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.அரசாணை பலவகை எண் 1718 கல்வி (டபிள்யூ) த்துறை நாள் 29.08.1980 இன் படி இக்கல்லூரியின் பெயர் அரசு கல்வியியல் கல்லூரி எனத் தமிழிலும் Government College of Education என ஆங்கிலத்திலும் மாற்றப்பட்டது.

கல்லூரிக் கட்டடங்கள் திறப்பு : தொகு

இக்கல்லூரி தொடக்கத்தில் அன்றைய குமாரபாளையம் அரசு - ஆண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தின் ஒருபுறத்தில் தொடங்கி நடத்தப்பட்டது. பின்னர் கல்லூரிக்கான இடம் குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டுத் தற்போதைய வளாகத்தில் 13.11.1970 அன்று அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் எஸ்.ஜே. சாதிக் பாட்ஷா அவர்கள் கல்லூரிக் கட்டத்திற்கான கால்கோளினை நாட்டினார். 05.03.1972 அன்று தமிழ் நாட்டின் அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் டாக்டர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் புதிய கட்டடத்தைத் (இன்றைய முதன்மைக் கட்டடம்) திறந்து வைத்தார். பிற்பட்டோர் தலத்துறை அமைச்சர் கே.ராஜாராம் அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். புதியகட்டடமானது, ரூ, 6,70,000 திட்ட மதிப்பீட்டில் அப்பொழுது கட்டப்பட்டது. இதில் ரூ.50,000 பல்கலைக்கழக மானியக் குழுவின் பங்களிப்பு அளிக்கப்பட்டது. 23. புதிய கட்டடத்தில் 03.1972 முதல் கல்லூரி செயல்பட்டு 31.03.1972 இல் கல்லூரி செயல்பட்ட பள்ளி வளாகம் பள்ளிநிருவாகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. புலவர் பட்டய வகுப்பு : 1959 ஆம் ஆண்டு புலவர் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு 100 மாணவர்கள் ஆண்டுதோறும் பயிற்சி பெற்றனர். இவ்வகுப்பு 1977 வரை தொடர்ந்து நடைபெற்று பின்னர் நிறுத்தப்பட்டு விட்டது.

எம்.எட் வகுப்பு: தொகு

1974 ஆம் ஆண்டு முதல் பகுதிநேர எம்.எட் வகுப்புகள் ஆண்டுதோறும் 8 மாணவர்கள் பயிலும் வகையில் தொடங்கப்பட்டது. 1982-83 ஆம் ஆண்டு இது முழுநேர வகுப்பாக மாற்றப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுவின் (NCTE) ஆய்வுக்குப் பின்னர் போதுமான ஆசிரியர் நியமனமின்மையால் எம்.எட் அங்கீகாரம் 24.09.2009 நாளிட்ட NCTE கடிதத்தால் ரத்து செய்யப்பட்டது.

அரசாணை (நிலை) எண் 97 உயர் கல்வி (ஜி1) துறை,நாள் 01.03.2011 இன் படி அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளிலும் எம்.எட் வகுப்பு தொடங்க ஆணையிடப்பட்டது. இப்பாடபிரிவுக்கென நான்கு பணியிடங்கள் அந்த ஆணையின் படி ஒப்பளிப்பு செய்யப்பட்டன. ஆயினும் தேசிய ஆசிரியர்க் கல்விக் குழு அங்கீகாரமும் ஆசிரியர் நியமனமுமின்மையால் இக்கல்லூரியில் எம்.எட். மாணவர் சேர்க்கை நடத்தப் பெறவில்லை.

இருபாலர் கல்லூரியாக மாற்றம்: தொகு

1990 முதல் இக்கல்லூரியில் பெண்களும் பயிலும் வகையில் பெண்களுக்கு 50 சத இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. (GO (MS) NO 543 EDUCATION(Z1} DEPT. DE 16.04.1990)

பல்கலைக்கழக இணைவு : தொகு

தொடக்கத்தில்சென்னைப் பல்கலைக்கழக இயைபுடன் 75 மாணவர்களுக்கு B.T என்ற பட்டவகுப்பு நடத்தப்பட்டது. பின்னர் 1969-70 ஆண்டில் 100 மாணவர்களாக உயர்த்தப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதையொட்டி 1998-99 முதல் அப் பல்கலைக்கழகத்தின் இணைவுடன் பி.எட் வகுப்புகள் நடத்தப்பட்டன. 2008-2009 முதல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுத் தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வியியல் கல்லூரிகளும் அப் பல்கலைக்கழக இணைவுடன் செயல்பட வகைசெய்தபோது இக்கல்லூரியும் அப்பல்கலைக்கழக இணைவைப் பெற்றது.

ஒற்றைச்சாளர வழி மாணவர் சேர்க்கை: தொகு

2008-09 முதல் மநில அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மையக் கலந்தாய்வு முறையில் பி. எட் சேர்க்கை நடத்தப்படுகிறது. மையக் கலந்தாய்வில் பங்கு பெற்று கல்லூரி சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்க்கப்படுகின்றனர்.

கல்லூரியின் பரப்பளவு: தொகு

அரசினர் பயிற்சிக்கல்லூரி அமைக்கப்பட்ட போது, திருச்செங்கோடு தாலுக்கா குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் 25.நாட்டுக்குட்டைத்தார். 26.புளியந்தார், 32.பெரியவீரக்குட்டைத்தார் என்ற பெயருடைய இடங்களில் முறையே 5.56, 4.01, 10.42 பரப்பளவில் மொத்தம் 19,99 ஏக்கர் நிலம் GO (MS) NO 2273 EDUCATION AND PUBLIC HEALTH DEPARTMENT DATED 27.10.1960 இன் படி கல்லூரிக்கென நில ஆர்ஜிதம் செய்து வழங்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பயன்பாட்டிற்கென 0 சதுரமீட்டர் இடம் 0.90 ஏக்கர் கல்லூரிக்கல்வித்துறை ந.க எண் 83936 எ1(2) 80 நாள் 18.12.84 இன் படி வழங்கப்பட்டது.கல்லூரியின் தென்மேற்குப் பகுதியில் ஆக்கிமித்துக் கட்டப்பட்ட சிவன் கோயில் தொடர்புடைய வழக்கில் ஒரு சார்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கல்லூரியின் சுமார் ஏக்கர் பரப்பளவு 1 இடத்தைக் கைவிட நேர்ந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கடிதம் ந.க எண் 10805 1 2013 (எல்2) நாள் 11.05.2013 வளாகத்திலிருந்து இன் படி கல்லூரியின் 9.34 ஏக்கர் நிலம் பிரிக்கப்பட்டு அந்த இடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட 10.01.2014 அன்று கட்டடக் கால்கோள் விழா நடத்தப்பட்டது. இதனால் கல்லூரியின் பின்புறம் அமைந்த இடங்களும் வடபகுதியில் அமைந்த இடமும் அரசு கலை அறிவியல் கல்லூரி வசமானது. இதனால் கல்லூரியின் தற்போதைய பரப்பளவு 10.23 ஏக்கர் என்ற அளவில் குறைந்தது.

மண்டலக் கல்லூரிக் கல்வி இணைவு: தொகு

கோயமுத்தூர் மண்டலக் கல்லூரிக்கல்வி இயக்குநரகம் பிரிக்கப்பட்டு, 2016 முதல் தருமபுரி மண்டலக் கல்லூரிக்கல்வி இயக்குநரகம் தொடங்கப்பட்டு இக்கல்லூரி அம்மண்டலத்தில் இணைக்கப்பட்டது இரண்டாண்டு வகுப்புகளாக மாற்றம் 2015-16 ஆம் ஆண்டு முதல் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் 2014 விதிகளின் படி பி.எட் மற்றும் எம்.எட் வகுப்புகள் இரண்டாண்டு வகுப்புகளாக மாற்றப்பெற்றன

கல்லூரி விடுதி: தொகு

கல்லூரியின் விடுதி தொடக்கக்காலத்தில் ஏறத்தாழ 50 மாணவர்கள் சேர்க்கையுடன் காவிரிக் கரையில் இருந்த அப்புராயர் சத்திரத்தில் நடைபெற்றது. மாணவர்களுக்கான மதிய உணவு குதிரை வண்டியின் மூலமாகக் கல்லூரி வளாகத்திற்குத் தினமும் எடுத்துவரப்பட்டது. மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை எஸ்.எஸ்.எம் அறக்கட்டளையின் சார்பில் இலவசமாக வண்டியில் கொணர்ந்து அப்புராயர் சத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.கல்லூரியின் தற்போதைய வளாகத்தில் ரூ.10,00,000 மதிப்பீட்டில் விடுதி கட்டப்பட்டு 1983-84 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் வரை அப்புராயர் சத்திர விடுதி செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 1990 இல் பெண்கள் கல்வி கற்க ஆணை வழங்கப்பட்டதையொட்டி மாணவிகள் தங்கும் வகையில் பெண்களுக்கான விடுதியும் தனியே கட்டப்பட்டது. கல்லூரியின் தென்புற விடுதி (குறிஞ்சி இல்லம்) பெண்கள் விடுதியாகவும் வடபுற விடுதி (காவிரி இல்லம்) ஆண்கள் விடுதியாகவும் தொடக்கத்தில் செயல்பட்டது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் விடுதியில் சேர்ந்தததை அடுத்து இடப் பற்றாக்குறையைச் சமாளிப்பதன் பொருட்டு குறிஞ்சி இல்லம் ஆண்கள் விடுதியாகவும் காவிரி இல்லம் பெண்கள் விடுதியாகவும் ஜூன் 2018 முதல் மாற்றப்பட்டன. (விடுதியை அடையாளப்படுத்த எளிமை கருதி, இப்பகுதியின் நிலவியல் தன்மையைச் சிறப்பிக்கும் வகையில் இவ்விரு விடுதிக்கும் காவிரி, குறிஞ்சி இல்லங்கள் என 2022 இல் பெயரிடப்பட்டது.) [4]

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் இளங்கல்வியியல் பட்டமானது, 2015ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டு பட்டப் படிப்பாக வழங்க ப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், பொருளறிவியல் (இயற்பியல், வேதியியல்), உயிரறிவியல் (தாவரவியல், விலங்கியல்) , வரலாறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன[5].

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tnteu.ac.in/affiliated_colleges.php
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-22. பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.
  3. http://gctekpm.org/index.php/about-us/ பரணிடப்பட்டது 2020-01-22 at the வந்தவழி இயந்திரம் , https://namakkal.nic.in/ta/public-utility/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/
  4. https://gcekpm.ac.in/uploads/Magazines/2022.pdf
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.