அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி தமிழகத்தின் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் சட்டக் கல்லூரியாகும். தமிழ்நாட்டு அரசின் ஏழு சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். தமிழகத்தின் இதர சட்டக்கல்லூரிகளைப் போலவே, இதன் நிருவாகம் தமிழக சட்டக் கல்வித்துறையிடம் உள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.[1]

அரசு சட்டக்கல்லூரி, செங்கல்பட்டு
வகைசட்டக்கல்லூரி
உருவாக்கம்2002
முதல்வர்ந. தேவநாதன்
அமைவிடம், ,
12°40′03″N 79°59′05″E / 12.667624°N 79.98476°E / 12.667624; 79.98476
சேர்ப்புடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.glccgl.ac.in

தொடக்கம் தொகு

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், 2002 ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியானது, தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஆறாவது சட்டக் கல்லூரியாகும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் செயல்படும் கல்லூரிகள் இதற்கு முன்னதாக தொடங்கப்பட்டவையாகும்.

வழங்கும் படிப்புகள் தொகு

இங்கு இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.

வெளியிணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு