அரசு பொறியியல் கல்லூரி

கும்பகோணத்தில் உள்ள கல்லூரி

அரசு பொறியியல் கல்லூரி (Arasu Engineering College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [1]

அரசு பொறியியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2000
தலைவர்டி. செந்தில் குமார்
முதல்வர்பி. கோபி
பணிப்பாளர்எஸ். அரவிந்த்
அமைவிடம், ,
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்aec.org.in

வரலாறு

தொகு

அரசு பொறியியல் கல்லூரியானது ஸ்ரீ திருநாவுக்கரசு தனலட்சுமி கல்வி அறக்கட்டளையால் 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையானது சமூக சேவைக்காக 2000 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளை தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் சிறந்த சேவையைச் செய்து வருகிறது. [2]

அரசு பொறியியல் கல்லூரி 2001-2002 ஆம் ஆண்டில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று இளநிலை பாடங்களை வழங்கியது. தற்போது இந்தக் கல்லூரியானது ஆறு இளநில்ப் பாடங்களையும், மூன்று முதுநிலை பாடங்களையும் வழங்கிவருகிறது

வழங்கப்படும் பாடங்கள்

தொகு
இளநிலை படிப்புகள்
  • பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
  • பி.இ. மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
  • பி.இ. குடிசார் பொறியியல்
  • பி.இ. இயந்திரப் பொறியியல்
  • பி.இ. ஊரிதிப் பொறியியல்
  • வேளாண் பொறியியல்
  • பி.இ. உயிர் மருத்துவ பொறியியல்
  • பி.டெக்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Arasu Engineering College, Kumbakonam". Engineering.careers360.com. 2016-02-21. Archived from the original on 2016-07-31. பார்க்கப்பட்ட நாள் 2016-11-29.
  2. "An Overview - Arasu Engineering College, Kumbakonam". Aec.org.in. Archived from the original on 2017-03-31. பார்க்கப்பட்ட நாள் 2016-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசு_பொறியியல்_கல்லூரி&oldid=3782139" இலிருந்து மீள்விக்கப்பட்டது