அரசு மகளிர் கல்லூரி, திருவனந்தபுரம்

அரசு மகளிர் கல்லூரி, திருவனந்தபுரம், என்பது முன்னர் மாட்சிமை தங்கிய மாமன்னர் மகளிர் கல்லூரி என்று அழைக்கப்பட்டது. இது கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பழமையான மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1864ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது.

அரசு மகளிர் கல்லூரி, திருவனந்தபுரம்
Government College for Women, Thiruvananthapuram
வகைபொது
உருவாக்கம்1864; 160 ஆண்டுகளுக்கு முன்னர் (1864)
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புகேரளப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.gcwtvm.ac.in

கல்வித் திட்டங்கள் தொகு

இக்கல்லூரி தற்பொழுது கேரளாப் பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்குகிறது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றவையின் முதல் தரத்தினைப் பெற்ற கல்லூரியாகும்.[1] தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின்படி இந்த கல்லூரி இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[2]

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • புள்ளியியல்
  • மனைஅறிவியல்

கலை மற்றும் வணிகம் தொகு

  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளாதாரம்
  • உளவியல்
  • இசை
  • வர்த்தகம்
  • தத்துவம்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரி புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் 12பி மற்றும் 2எப் தகுதியுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் தொகு

  • வீணா ஜார்ஜ், கேரள அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
  • விந்துஜா மேனன், மலையாள திரைப்பட நடிகை
  • நபீசா உம்மாள், இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

மேற்கோள்கள் தொகு

  1. "Affiliated College of Kerala University".
  2. "MoE, National Institute Ranking Framework (NIRF)".

வெளி இணைப்புகள் தொகு