அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்

அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் (Government Medical College, Dindigul) என்பது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 2021-2022 கல்வி ஆண்டு முதல் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட, திண்டுக்கல் அருகே உள்ள ஒடுக்கத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு,[1] ரூபாய் 327 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.[2] இதன் பணிகள் முடிவடைந்தை அடுத்து இக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் சனவரி 12, 2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சிமூலம் இக்கல்லூரியினைத் திறந்து வைத்தார்.[3] நடப்பு கல்வியாண்டு முதல் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றிற்கு 150 மாணவர் வீதம் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்". Polimer News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
  2. "ரூ.327 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டிட பணி". Dailythanthi.com. 2021-06-22. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12.
  3. R, Vishnupriya (2022-01-12). "தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள்.. காணொலியில் திறந்து வைத்த பிரதமர் மோடி!". https://tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-12. {{cite web}}: External link in |website= (help)