அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி
அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி (Government Vellore Medical College, GVMCH) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள வேலூர் நகரத்திற்கு அருகிலுள்ள அடுக்கம்பாறையில் அமைந்துள்ள ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆகும்[1]. 2005 ஆம் ஆண்டு இக்கல்லுரி நிறுவப்பட்டது[2].வேலூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இக்கல்லூரி உள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எசு எனப்படும் மருத்துவப் பட்டப் படிப்பு, மருந்தியல் பொது மருத்துவம் முதுநிலை படிப்பு, பொது அறுவைச்சிகிச்சை முதுநிலை படிப்பு பிரிவுகளுக்கான வகுப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன.
குறிக்கோளுரை | குணமாக்கக் கற்றுக்கொள் |
---|---|
வகை | மருத்துவக் கல்லூரி |
உருவாக்கம் | 2005 |
பட்ட மாணவர்கள் | 100 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 6 |
அமைவிடம் | வேலூர் , தமிழ்நாடு , இந்தியா |
வளாகம் | கிராமம் |
சுருக்கப் பெயர் | GVMCians |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.gvmc.in |
வரலாறு
தொகு1997 ஆம் ஆண்டு இக்கல்லூரியைத் தொடங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது இக்கல்லூரியின் அமைவிடத்தில் காசநோய் உடல்நல மையம் செயல்பட்டு வந்தது. 2005-ஆம் ஆண்டு முதல் இங்கு முதலாமாண்டு மருத்துவ மாணவர்களின் சேர்க்கை தொடங்கியது. தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் கல்லூரியாக இது செயல்படுகிறது[3].
மாணவர் சேர்க்கை
தொகுஒவ்வோர் ஆண்டும், தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் இங்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.[4][5][6] ஒவ்வோர் ஆண்டும் சேர்க்கைக்காக ஒப்புக் கொள்ளப்பட்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆகும். அனைத்து இந்திய இடஒதுக்கீட்டின் படியான மாணவர்கள் சேர்க்கைக்கு 15 சதவிகித இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.[6].
புகழ்
தொகுஇந்தியா டுடே பத்திரிகை கருத்துக்கணிப்பு நடத்தி இந்தியாவில் வளர்ந்துவரும் மருத்துவக் கல்லூரியின் பட்டியலை தயாரித்தது. புகழ்பெற்ற முதல் பத்து தமிழக மருத்துவக் கல்லுரிகளின் பட்டியலில் அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி ஆறாவது இடத்தைப் பிடித்தது.[7]
சேவைகள்
தொகுஎம்.ஆர்.ஐ. எனப்படும் காந்த அதிர்வு அலை வரைவு சோதனை, சி.டி சிகேன் எனப்படும் வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி சோதனை, இதயத்துடிப்பு மின்வரைவு சோதனை, இதய அழுத்த பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளும் வசதிகள் இங்குள்ளன. இவை தவிர அவசரநிலை மகப்பேறு மற்றும் மகப்பேறியல், பிறந்த குழந்தைகள் பராமரிப்பு மருத்துவம், எதிர்ப்பு-ரெட்ரோவைரல் சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த ஆலோசனை சோதனை மையம் ஆகிய வசதிகளும் இங்குள்ளன,[8].
சான்றுகள்
தொகு- ↑ "List of colleges teaching MBBS". mciindia.org. Medical Council of India. Archived from the original on 7 June 2013. பார்க்கப்பட்ட நாள் 1 July 2013.
- ↑ "History". www.gvmc.in. Government Vellore Medical College. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
- ↑ "Affiliated Colleges". web.tnmgrmu.ac.in. Tamil Nadu Dr. M.G.R. Medical University. Archived from the original on 28 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Directorate of Medical Education". www.tnhealth.org. Health and Family Welfare Department of Tamil Nadu. Archived from the original on 27 June 2013. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
- ↑ "Medical Colleges". Health and Family Welfare Department of Tamil Nadu. Archived from the original on 20 July 2013. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
- ↑ 6.0 6.1 "Selection and Admission Procedures for MBBS/BDS/PG Degree/PG Diploma/Higher Speciality and Paramedical Courses". www.tnhealth.org. Health and Family Welfare Department of Tamil Nadu. Archived from the original on 26 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Best Emerging Colleges 2013 in medical India Today Survey". intoday.in. Archived from the original on 31 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Facilities". www.gvmc.in. Government Vellore Medical College. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.