அரிகர நதி
அரிகர ஆறு என்பது சிற்றாற்றின் ஐந்து முதல் நிலை துணையாறுகளுள் ஒன்று. இது செங்கோட்டை, பூலாங்குடியிருப்பு புளியரை மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி தென்காசியில் சிற்றாறுடன் இணைகிறது. இது ஏழு அணைகளைக் கொண்டு 445.10 ஹெக்டேர் நிலங்களுக்கு நேரடி பாசன வசதி அளிக்கிறது. இந்த ஆற்றின் இணையாறுகளான குண்டாறு, மொட்டையாறு மூலம் மறைமுகமாக முறையே 465.39 மற்றும் 141.64 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.