அரிசிக் கொம்பன்

இந்திய யானை

அரிசிக் கொம்பன் (பிறப்பு அண். 1986/1987) என்பது கேரள தமிழக எல்லையில் வசிக்கும் கொம்பன் வகை இந்திய யானை ஆகும்.[1] இந்த யானை 2023 ஏப்ரல் மாதத்தில் இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கனல் பகுதிகளில் ஊருக்குள் புகுந்து தாக்கியதில் சுமார் பத்து பேர் இறந்தனர்.[2][3] ஊருக்குள் புகுந்து வீடுகளில் அரிசியைச் சாப்பிடுவதால் அரிசிக் கொம்பன் என்று தமிழகத்திலும் அரிக்கொம்பன் என்று கேரளத்திலும் அழைக்கப்படுகிறது.[4]

அரிசிக் கொம்பன்
இனம்ஆசிய யானை
பால்ஆண்
பிறப்பு1986/1987
கேரளம், இந்தியா
நாடுஇந்தியா

அரிசிக் கொம்பன் 1980களில் பிறந்திருக்கும் எனக் கணிக்கின்றனர். முதலில் சின்ன கொம்பன் என அழைக்கப்பட்டு, 2010களில் இதன் முரட்டுத் தனத்தால் அரிசிக் கொம்பன் எனப் பெயர் பெற்றது.[5][6] நியாயவிலைக் கடைகள், வீட்டின் சமையலறை, மளிகைக் கடை என்று பல்வேறு இடங்களுக்குச் சென்று அரிசியை உண்டு வந்தது[7] 2005 முதல் சுமார் 75 இக்கும் மேற்பட்ட கட்டடங்களைச் சேதப்படுத்தியுள்ளது.[8] கேரள அரசுக்கும் விலங்கு நல ஆர்வலர்களுக்கும் இடையே நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 29 ஏப்ரல் 2023 சின்னக்கனல் பகுதியிலிருந்து நான்கு கும்கிகளின் துணையுடன் பெரியாற்றுத் தேசியப் பூங்கா பகுதியில் அரிசிக் கொம்பனை விட நீதிமன்றம் உத்தரவிட்டது.[9] மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட பிறகு இதன் கழுத்தில் செயற்கைகோள் வானொலி காலர் பொருத்தப்பட்டு, கேரள தமிழக எல்லைப் பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பகுதியில் விடப்பட்டது.

அரிக்கொம்பன் பெயரில் யானைக்கு ரசிகர் சங்கம் தொடங்கப்பட்டது.[10]


மேற்கோள்கள்

தொகு
  1. "Rogue elephant Arikomban darted with tranquillisers in Kerala's Idukki". The Indian Express (in ஆங்கிலம்). 2023-04-29. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
  2. "சிக்னல் `கட்’... தமிழக வன எல்லையில் அரிசிக் கொம்பன் யானை!". விகடன். https://www.vikatan.com/environment/elephant-arisi-kombam-missing-after-left-in-tamilnadu-forest. பார்த்த நாள்: 27 May 2023. 
  3. Sharma, Aasheesh (28 Apr 2023). "The Hunt for Arikomban: how a Kerala rogue elephant that killed 10 people is still on the loose". news9live.com. https://www.news9live.com/india/the-hunt-for-arikomban-how-a-kerala-rogue-elephant-that-killed-10-people-is-still-on-the-loose-au2209-2119723. 
  4. "Arikomban: 'Killer' Indian elephant relocated to tiger reserve" (in en-GB). BBC News. 2023-05-01. https://www.bbc.com/news/world-asia-india-65446247. 
  5. "Arikomban went from orphaned calf to troublemaker - The New Indian Express". www.newindianexpress.com. Archived from the original on 2023-04-10. பார்க்கப்பட்ட நாள் 2023-05-05.
  6. "'Arikomban', Kerala's Rice-Eating Rogue Elephant Relocated Amidst Row: The Story So Far". TimesNow (in ஆங்கிலம்). 2023-05-01. பார்க்கப்பட்ட நாள் 2023-05-05.
  7. "Chasing Arikomban: Why is Kerala looking for a rogue wild elephant since 2018". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-05.
  8. "ഇതാണ് അരിക്കൊമ്പൻ". Newspaper (in ஆங்கிலம்). 2023-04-29. பார்க்கப்பட்ட நாள் 2023-05-05.
  9. "Kerala's Rogue Elephant Tranqualised, Shifted To Periyar Tiger Reserve". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-05.
  10. "அரிக்கொம்பன் ஆட்டோ சங்கம் – இடுக்கியில் யானைக்கு உருவான ரசிகர் கூட்டம்!". நியூஸ்7. https://news7tamil.live/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae.html?utm=thiral. பார்த்த நாள்: 27 May 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசிக்_கொம்பன்&oldid=4109935" இலிருந்து மீள்விக்கப்பட்டது