அரிட்டாபட்டி கல்வெட்டுகள்
அரிட்டாபட்டி கல்வெட்டுகள், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், அரிட்டாபட்டி ஊராட்சியில் அமைந்த அரிப்படாபட்டி கிராமத்தில் உள்ள அரிட்டாபட்டி மலைக்குன்றில் உள்ளது. இம்மலைக் குன்றின் கிமு இரண்டாம் நூற்றாண்டு சமணப் படுக்கைகளும், அதன் மேல் இரண்டு வரியில் தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் உள்ளது. இம்மலைக்குன்றில் மகாவீரர் புடைப்புச் சிற்பத்தின் கீழ் 1,300 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்து தமிழ் வட்டெழுத்து கல்வெட்டும், ஒரு குடைவரை கோயிலும் உள்ளது. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமிர செப்பேடுகளும் அரிட்டாபட்டி மலைக்குன்றில் கண்டெடுக்கப்பட்டது. அரிட்டாபட்டி மலைக்குன்றின் தமிழி கல்வெட்டும், வட்டெழுத்து கல்வெட்டுகளும் மதுரையில் வாழ்ந்த சமண சமயத்தவரைக் குறிக்கும் கல்வெட்டுகளாகும்.
அமைவிடம்
தொகுஅரிட்டாபட்டி கல்வெட்டுக்கள் மேலூருக்கு மேற்கே 9 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரை நகரத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள அரிட்டாபட்டி மலைக்குன்றில் உள்ளது.[1]
கல்வெட்டுக்களின் விளக்கம்
தொகுதமிழ்ப் பிராமி கல்வெட்டு
தொகுகிமு இரண்டாம் நூற்றாண்டு அரிட்டாபட்டி தமிழ்ப் பிராமி கல்வெட்டுகளை கள ஆய்வுகளில் திருத்தமாக பாடம் வாசிக்கப்பட்டு ஐ. மகாதேவன் என்பவர் தனது ஆய்வு அறிக்கையில் வெளியிட்டார்.[2]தமிழ்ப் பிராமி கல்வெட்டில் நெல்வேலியைச் சேர்ந்த சிழிவன் அதினன் வெளியன் என்பவன் இக்குகைத் தளத்தை கட்டுவித்தான் என்றுள்ளது. சிழிவன் என்பது செழியன் என்னும் பாண்டியர் குடிப்பெயராகும். அதினன் வெளியன் என்பது கொடையாளியின் இயற்பெயராகும். வெள் என்பதன் நீட்டலே வேள் என்பது ஆய்வு முடிபாகும். எனவே நெல்வேலியை ஆண்ட அதினன் என்னும் வேள் அமைத்து வைத்த கற்படுக்கையாக இதனைக் கருதலாம். இவ்வேள் பாண்டியர் குடியைச் சேர்ந்தவன் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
வட்டெழுத்து கல்வெட்டு
தொகுதிருப்பிணையன் மலையிலிருந்த பொற்கோட்டுக் கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட மகாவீரர் திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது. பாண்டியர் கால இக்கல்வெட்டு 1300 ஆண்டுகள் பழமையானது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மதுரை - அரிட்டாபட்டி செல்லும் வரைபடம்
- ↑ [இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 264 -1978-79, Early Tamil Epigraphy - I.Mahadevan, தமிழ்-பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை]