அரித்மோமீட்டர்

1820 ஆம் ஆண்டில், பிரான்சைச் சேர்ந்த சால் சேவியர் தாமசு டி கோல்மர் எனும் அறிஞர் அரித்மோமீட்டர் எனும் கணக்கிடும் விசைமுறைக் கருவியை வடிவமைத்தார். இது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய கணக்குகளை விரைவாகச்செய்திடும், வணிகரீதியாக வெற்றிபெற்ற முதல் எண்ணிம பொறிமுறை கணிப்பானாக இருந்த இதல் உருவாக்கம் 1915 வரை தொடர்ந்தது. 1857 ஆம் ஆண்டில், அமெரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த தாமசு இல் என்பவர் எண்-விசைப்பலகையை, பயனர்-இடைமுகமாகக் கொண்ட, இம்ப்ரூவ்ட் அரித்மோமீட்டர் எனும் கணிப்பான் கருவியை வடிவமைத்தார். இதன் தொடர்சியாக லியனார்ட் நூட்சு(1858), சோசப் அலெக்சான்டர்(1864), பெர்டிரிக் அர்சுபெர்கர்(1866), கில்பெர்ட் சாப்லின்(1870), டேவிட் கரோல்(1876) ஆகியோரும் அமெரிக்க ஒன்றியத்தில் அரித்மோமீட்டரை ஒத்த கணக்கிடும் கருவிகளை வடிவமைக்கலாயினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரித்மோமீட்டர்&oldid=2912812" இருந்து மீள்விக்கப்பட்டது