நழுவு சட்டம்

நழுவு சட்டம், நழுவு கோல் அல்லது ஊர்வு அளவுகோல் (slide rule) [1] என்பது ஒரு ஒப்புமைக் கணிப்பொறி ஆகும்.[2][3][4][5][6] பெருக்கல், வகுத்தல் செயல்களுக்கும் N ஆம் மூலங்கள், மடக்கைகள், முக்கோணவியல் சார்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகக் கூட்டல், கழித்தலுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. தோற்றத்தில் சாதாரண அளவுகோலை ஒத்ததாக இருந்தாலும், பொதுவாக நீளத்தை அளக்க, நேர்கோடுகள் வரைய நழுவுகோலானது பயன்படுத்தப்படுவதில்லை.

பத்து-அங்குல நழுவுகோல். (Pickett N902-T simplex trig).

வேறுபட்ட பலவிதமான வடிவங்களில் இருந்தபோதும் இவைக் கணிதக் கணக்கிடுதலுக்குத் தேவையான அளவுகள் குறிக்கப்பட்ட, நீள அல்லது வட்டவடிவமானதாகவே பொதுவாக அமைந்துள்ளன. பறப்பியல், நிதியியல் போன்ற சிறப்புத்துறைகளுக்குப் பயன்படுத்தப்படும் நழுவுகோல்கள், அந்தந்தத் துறைகளின் கணக்கிடுதலுக்குத் தேவையான அளவுகள்க் கொண்டிருக்கும்.

நேப்பியரின் மடக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலக் கணிதவியலாளர் வில்லியம் ஆட்ரெடும் பிறரும் இணைந்து 17 ஆம் நூற்றாண்டில் நழுவுச் சட்டத்தை மேம்படுத்தினர். பை-கணிப்பானின் வரவுக்குமுன், நழுகோல்தான் அறிவியலிலும் பொறியியலிலும் கணக்கிடுதலுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்ட கருவியாகும். 1950களிலும் 1960களிலும் எண்ணிம கணக்கிடும் பொறிகள் அறிமுகமாகிக் கொண்டிருந்தபோதும் நழுவுகோலின் பயன்பாடு தொடர்ந்தது. ஆனால் 1974 இல் அறிவியல் கணிப்பானின் அறிமுகத்திற்குப் பின்னர் இதன் பயன்பாடு பெரும்பாலும் மறைந்து போனது.[7][8][9][10]

குறிப்புகள் தொகு

  1. Lester V. Berrey and Melvin van den Bark (1953). American Thesaurus of Slang: A Complete Reference Book of Colloquial Speech. Crowell.
  2. Roger R. Flynn (June 2002). Computer sciences. Vol. 1. Macmillan. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-865567-3. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013. The slide rule is an example of a mechanical analog computer...
  3. Swedin, Eric G.; Ferro, David L. (24 October 2007). Computers: The Life Story of a Technology. JHU Press. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8774-1. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013. Other analog mechanical computers included slide rules, the differential analyzer built by Vannevar E. Bush (1890–1974) at the ...
  4. Peter Grego (2009). Astronomical cybersketching. Springer. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-85351-2. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013. It is astonishing to think that much of the routine mathematical work that put people into orbit around Earth and landed astronauts on the Moon in the 1960s was performed using an unassuming little mechanical analog computer – the 'humble' slide rule.
  5. Ernst Bleuler; Robert Ozias Haxby (21 September 2011). Electronic Methods. Academic Press. p. 638. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-085975-0. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013. For example, slide rules are mechanical analog computers,
  6. Harry Henderson (1 January 2009). Encyclopedia of Computer Science and Technology, Revised Edition. Infobase Publishing. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-1003-5. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013. Another analog computer, the slide rule, became the constant companion of scientists, engineers, and students until it was replaced ... logarithmic proportions, allowing for quick multiplication, division, the extraction of square roots, and sometimes the calculation of trigonometric functions.
  7. Behrens, Lawrence; Rosen, Leonard J. (1982). Writing and reading across the curriculum. Little, Brown. p. 273. Then, just a decade ago, the invention of the pocket calculator made the slide rule obsolete almost overnight...
  8. Maor, Eli (2009). e: The Story of a Number. Princeton University Press. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-14134-3. Then in the early 1970s the first electronic hand-held calculators appeared on the market, and within ten years the slide rule was obsolete.
  9. Castleden, Rodney (2007). Inventions that Changed the World. Futura. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7088-0786-6. With the invention of the calculator the slide rule became instantly obsolete.
  10. Denning, Peter J.; Metcalfe, Robert M. (1998). Beyond calculation: the next fifty years of computing. இசுபிரிங்கர். p. xiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-98588-6. The first hand calculator appeared in 1972 and made the slide rule obsolete overnight.

வெளி இணைப்புகள் தொகு

General information, history

வார்ப்புரு:Athority control

"https://ta.wikipedia.org/w/index.php?title=நழுவு_சட்டம்&oldid=3711543" இலிருந்து மீள்விக்கப்பட்டது