அருணா இராஜகோபால்

இந்திய அரசியல்வாதி


முனைவர் அருணா இராஜகோபால் புதிய தமிழகம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனையாளரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவியலாளரும் ஆவார். திராவிடர் கழத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார்.

பல்கலைக்கழக பணி ஓய்விற்குப் பிறகு பதினைந்து ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார். புதிய தமிழகம் கட்சியின் கொள்கை வகுப்பாளராக பணியாற்றிய அருணா மருத்துவர் க. கிருஷ்ணசாமியுடன் இணைந்து உருவாக்கிய கோவை பிரகடனம் தமிழக தாழ்தப்பட்ட மக்கள் விடுதலை வரவாற்றில் மிக முக்கிய ஆவணம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக ஆட்சிக்குழு, கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகthத் துணைவேந்தர் தேர்வுக்குழு உள்ளிட்ட பல உயர் குழுக்களில் பணியாற்றினார். இக்குழுக்களில் பணியாற்றிய போது தாழ்த்த்ப்பட்ட மக்களுக்கான கல்விசார்/ சார் பணியிடங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தமிழக சட்டமன்றத்திலும்,மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தியதன் மூலம் தமிழக் அரசுக்கல்லூரிகள்,கோவை சி.பி.எம் கல்லூரி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகthம், பாரதியார் பல்கலைக்கழகம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி அமைப்புகளில் 800 உதவிப்பேராசிரியர்கள் (BAGLOG/ SHORT FALL VACCINCIES) உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் பணியாற்றிய போது மாணவர் சேர்க்கை, ஆசிரியர் தேர்வு/ பணியாளர் தேர்வுகளின் போது பட்டியல் இன மக்களுக்கான உரிமைகளைக் கோருவதில் தீரமுடன் செயலாற்றினார்.

இவர் தோட்டவளம் (1978), தோட்ட இயல் நெறிகள்(2000), பிற்படுத்தப்பட்டோர் விடுதலையும் அம்பேத்கரும் (1994), பாவாணரின் சமுக,சமய கருத்துக்கள்(2005) நெற் பயிர் விளை மூர்க்கரோடு இணங்கேல் (2010) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவர் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக உழவியல் துறை அறிவியலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வேளாண்மைப்பல்கலைக்கழக உழவியல் துறைத்தலைவர்,நீர் நுட்பவியல் மைய இயக்குநர்,வெளியீட்டு இயக்க்க இயக்குநர் ஆகிய உயர் பதவிகளை வகித்தவர்.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழக மாண்புடை பேராசிரியராக பணியாற்றினார். தமிழக, தமிழக அறிவியல் பேரவை, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகக் கலைச்சொல்லாக்கக்குழு, அறிவியல் களஞ்சியக்குழு, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் போன்ற அறிவியல் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணா_இராஜகோபால்&oldid=4100314" இலிருந்து மீள்விக்கப்பட்டது