அருணா ஜெயந்தி

அருணா ஜெயந்தி ஒரு இந்திய தொழிலதிபரும் கேப்ஜெமினியின் ஆசியா பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்கா வணிக பிரிவின் நிர்வாக இயக்குநரும் ஆவார். இதற்கு முன்னர் பிசினஸ் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கேப்ஜெமினியின் இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். ஜெயந்தி 2000 ஆம் ஆண்டில் கேப்ஜெமினியில் பணியில் சேர்ந்தார், மேலும் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் அமைப்புகளைத் துவங்க அமைக்கப்பட்ட முக்கிய குழுவின் ஒரு பகுதியாக இருந்தார், இறுதியில் அவர்களின் உலகளாவிய புற ஒப்படைப்பு சேவைகளுக்கு தலைமை தாங்கினார்.[1][2] ஜெயந்தி நவம்பர் 2014 முதல் கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆளுநர் குழுவின் தலைவராக உள்ளார்.[3]

அருணா ஜெயந்தி

கல்வி

தொகு

ஜெயந்தி 1984 ஆம் ஆண்டில் ஸ்ரீ விலே பார்லே கேலவாணி மண்டலின் (SVKM's NMIMS) நர்சீ மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் நிதி மேலாண்மை ஆய்வில் முதுகலைப் பட்டம் பெற்றார் .[4]

விருதுகள்

தொகு

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பார்ச்சூன் இதழ் வழங்கிய இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்' பட்டியலில் ஜெயந்தி இடம்பெற்றார் மேலும் பிசினஸ் டுடேயின் ’வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்' விருதினை 2011-2015 மற்றும் 2017-2018 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். அவர் 2013 இல் 'இந்தியா டுடே வுமன் விருது' பெற்றார். ஜெயந்தி நாஸ்காமின் நிர்வாக சபை உறுப்பினராகவும் உள்ளார்.[5]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Capgemini rejig: Aruna Jayanthi elevated as APAC, LatAm biz unit MD". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 5 September 2018. https://www.business-standard.com/article/companies/capgemini-rejig-aruna-jayanthi-elevated-as-apac-latam-biz-unit-md-118090500917_1.html. 
  2. "Aruna Jayanthi leads Latin American operation of Capgemini". Consultancy.lat. 6 September 2018. https://www.consultancy.lat/news/668/aruna-jayanthi-leads-latin-american-operation-of-capgemini. 
  3. "Women honchos of tech firms appointed to NIT board of governors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 November 2014. http://timesofindia.indiatimes.com/articleshow/45017470.cms?_ga=1.30501759.1187215826.1415001879. 
  4. "Aruna Jayanthi elevated as Capgemini APAC, LatAm business unit MD". பிசினஸ் லைன். 5 September 2018. https://www.thehindubusinessline.com/companies/aruna-jayanthi-elevated-as-capgemini-apac-latam-business-unit-md/article24871303.ece. 
  5. "Aruna Jayanthi puts Indian Women in the limelight with her Contribution to IT Industry". ViralIndianDiary.com. 22 April 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணா_ஜெயந்தி&oldid=4169284" இலிருந்து மீள்விக்கப்பட்டது