அருண் ஹேமச்சந்திரா

அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra, 19 சூலை 1991)[1] ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4] அருண் ஹேமச்சந்திரா 2024 நவம்பர் 21 இல், அனுர குமார திசாநாயக்கவின் அரசில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக இவர் உள்ளார். மேலதிகமாக இவர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராகவும் 2024 நவம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.[5]

அருண் ஹேமச்சந்திரா
Arun Hemachandra
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்அரிணி அமரசூரியா
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை38,368 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 19, 1991 (1991-07-19) (அகவை 33)
திருகோணமலை
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி
வாழிடம்திருகோணமலை

திருகோணமலையில் பிறந்த அருண் ஹேமச்சந்திரா திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, கண்டி திரித்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

தேர்தல் வரலாறு

தொகு
அருண் ஹேமச்சந்திராவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் திருகோணமலை மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 38,368 தெரிவு[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory of Members: Arun Hemachandra". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2024.
  2. "BREAKING – Sri Lanka's NPP secures 'super majority' in parliament as it secures biggest ever win". Tamil Guardian. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
  3. "Trincomalee District preferential vote results". Sri Lanka Mirror. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
  4. "Trincomalee District preferential vote results". Ada Derana. 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
  5. ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமச்சந்திரா நியமனம், ஐபிசி தமிழ்
  6. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_ஹேமச்சந்திரா&oldid=4156836" இலிருந்து மீள்விக்கப்பட்டது