அருளியசு மச்சக்கெண்டை
அருளியசு மச்சக்கெண்டை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | தாவ்கின்சியா
|
இனம்: | தா. அருளியசு
|
இருசொற் பெயரீடு | |
தாவ்கின்சியா அருளியசு (செருடன், 1849) | |
வேறு பெயர்கள் | |
|
அருளியசு மச்சக்கெண்டை (Arulius Barb) என்பதின் விலங்கியல் பெயர் தாவ்கின்சியா அருளியசு என்பதாகும். இது தென்கிழக்கு இந்தியாவின் காவேரி ஆற்றுப் படுகையில் காணப்படும் வெப்பமண்டல சைப்ரினிட் குடும்ப மீனாகும்.[2] இது தாமிரபரணி மச்சக்கெண்டை, சிலாசு மச்சக்கெண்டை மற்றும் நீளத்துடுப்பு மச்சக்கெண்டை என்றும் அறியப்படுகிறது.
விளக்கம்
தொகுமுதிர்ச்சியடைந்த மீன்களின் பின்புறத்தில் அடர் பழுப்பு நிற ஆலிவ் நிறத்திலும், பக்கங்களில் வெண்மையான வயிற்றுப்பகுதியினை கொண்டது. இதன் இடுப்பு துடுப்பு தோற்ற இடத்திற்கு மேலே, கருப்பு, செங்குத்து கறை உள்ளது. முதிர்ச்சியடைந்த மீன்கள் இளம் வயது மீன்களைவிட நல்ல நிறமுடையன. மேலும் வளர்ச்சியடைந்த ஆண் மீனானது தாமிரபரணி ஆற்றில் காணப்படும், தாவ்கின்சியா தாம்பிரபரனியே நெருங்கிய தொடர்புடையது. பிரிவுடைய முதுகுத் துடுப்பில் இழைபோன்ற நீட்சிகள் காணப்படாததால் இம்மீனை நீளத்துடுப்பு மச்சக்கெண்டை (தாவ்கின்சியா பிளமெண்டோசா) என அழைப்பது தவறு. இம்மீன்கள் 12 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியன.
வாழ்விடம்
தொகுஇதன் பூர்வீக வாழ்விடமாகப் பெரிய நீரோடைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் ஆகும். இது கார அமிலத்தன்மை 6.0 முதல் 6.5 வரையும், வெப்பநிலை 19° முதல் 25° சென்டிகிரேடு வரை உள்ள நீர் நிலைகளில் காணப்படும்.
சொற்பிறப்பியல்
தொகுஇதன் சிற்றினப் பெயரான “அருளியசு” என்ற பெயர் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் சொல்லான "அருள்" என்பதிலிருந்து பெறப்பட்டது.
மீன்காட்சியகங்களில்
தொகுபிற மச்சக்கெண்டை மீன்களைக் காட்டிலும் பொழுதுபோக்கு மீன் காட்சியகங்களில் குறைவாகக் காணப்பட்டபோதிலும், இவை சுறுசுறுப்பானவை. இதனுடைய இனப்பெருக்க திறன் புலி மச்சக்கெனண்டை (புன்டிகிரஸ் டெட்ராசோனா), மற்றும் ரோசி மச்சக்கெண்டை (பெத்தியா கான்கோனியசு) போன்றது. ஒத்த அளவிலான சைப்ரினிட் இனங்கள். சில சிச்லிட் இனங்கள் போன்று பிற மீன்களால் வேட்டையாடப்படும் அபாயத்தில் உள்ளது. பல மச்சக்கெண்டைகளைப் போலவே, வேகமாக நீந்தும் தன்மையுடையது. எனவே மீன்காட்சித் தொட்டிகளில் இம்மீன்களின் எண்ணிக்கையினை 5 முதல் 6 வரை வைத்திருப்பதன் மூலம் இந்நடத்தையினை தணிக்கலாம். முதிர்ந்த மீன் ஒன்றிற்கு 10 முதல் 12 செ.மீ. இடவசதி தேவைப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Abraham, R. (2015). "Dawkinsia arulius". IUCN Red List of Threatened Species 2015: e.T172500A70168511. doi:10.2305/IUCN.UK.2015-1.RLTS.T172500A70168511.en. https://www.iucnredlist.org/species/172500/70168511.
- ↑ "Dawkinsia arulius". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. April 2013 version. N.p.: FishBase, 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-10-14. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
- Rohan Pethiyagoda & Maurice Kottelat. "A review of the barb of the Puntius filamentosus group (Teleostei: Cyprinidae) of southern India and Sri Lanka" (PDF). The Raffles Bulletin of Zoology, 2005 Supplement No. 12: 127–144. Archived from the original (PDF) on 11 August 2007. பார்க்கப்பட்ட நாள் 5 February 2006.