அரேனி-1 சப்பாத்து
அரேனி -1 ஷூ (Areni-1 shoe) எனப்படும் அரேனி-1 சப்பாத்து என்பது 5,500 ஆண்டுகள் பழமையான தோல் காலணி ஆகும், இது 2008 ஆம் ஆண்டில் ஆர்மீனியாவின் வயோட்ஸ் டோர் மாகாணத்தில் அமைந்துள்ள அரேனி -1 குகையில் நல்ல நிலையில் காணப்பட்டது. இது ஒரு பெரிய தோல் துண்டால் செய்யப்பட்ட- ஷூ எனப்படும் சப்பாத்து ஆகும், இது சமகால ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்த உலகின் மிகப் பழமையான தோல் காலணி ஆகும். ஆர்மீனியாவின் தேசிய அறிவியல் அகாடமியின் தொல்பொருள் மற்றும் மக்கள் இன அமைப்பியல் நிறுவனத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான போரிஸ் காஸ்பரியன் தலைமையிலான சர்வதேச குழு இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டது (திட்டத்தின் இணை இயக்குநர்கள் அயர்லாந்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி கார்க்கைச் சேர்ந்த ரான் பின்ஹாசி மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்துவந்த வந்த கிரிகோரி அரேஷியன்).
தற்போதைய இடம் | ஆர்மீனிய வரலாற்று அருங்காட்சியகம் |
---|
கண்டுபிடிப்பு
தொகுஆர்மீனியாவின் தொல்பொருள் மற்றும் மக்கள் இன அமைப்பியல் ஆய்வாளர்கள் மற்றும் அயர்லாந்து, அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு அகழ்வாராய்ச்சியின் போது, ஆர்மீனிய முதுகலை மாணவரான டயானா சர்தாரியன் என்பவர் இந்தத் தோல் காலணியைக் கண்டுபிடித்தார். [1] இந்த காலணியானது குகையில் குறைந்த ஆழத்தில் அதாவது 45 cm (18 அங்) ஆழமும், 44-48 செ.மீ (17–19 அங்குலம்) அங்குலம் கொண்ட குழியில் கவிழ்ந்த உடைந்த செப்புக் கால பீங்கான் கிண்ணத்தின் அடியில். ஆட்டின் சாணம் கொண்டு வட்டமாக கெட்டியாக பூசப்பட்ட தளத்தில் இந்த ஷூ தலைகீழாகக் காணப்பட்டது. அதே பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் உலகின் பழமையான மது தயாரிக்கும் தளமும் கிடைத்தது.
இந்த ஆராய்ச்சிக்கு தேசிய புவியியல் கழகம், சிட்ஜியன் அறக்கட்டளை, கோஃபெல்லர் அறக்கட்டளை, ஸ்டெய்ன்மெட்ஸ் குடும்ப அறக்கட்டளை, பூச்செவர் அறக்கட்டளை மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள கோட்சன் தொல்பொருள் நிறுவனம் ஆகியவை நிதியளித்தன . [2] இந்தக் கண்டுபிடிப்புகள் 2010 சூன் 9 அன்று PLOS One இதழில் வெளியிடப்பட்டன.
பகுப்பாய்வு
தொகுகுகையில் குளிர்ந்த மற்றும் வறண்ட காலநிலையிலும் இந்தக் காலணி மக்கிப்போகாமல் இருந்ததற்குக் காரணம், செம்மறி ஆட்டின் சாணம் கொண்டு கெட்டியாக உருவாக்கப்பட்ட தளத்திலுள் அது புதைத்து வைக்கப்பட்டிருந்ததே ஆகும். அதே குகையில் பெரிய சேமிப்புக் கொள்கலன்கள் காணப்பட்டன, அவற்றில் நன்கு பாதுகாக்கப்பட்ட கோதுமை, பார்லி மற்றும் சர்க்கரை பாதாமி போன்ற உணவுப் பொருட்களையும் வைத்திருந்தனர். [3] ஷூவுக்குள் வைக்கோல் இருந்தது. இதற்காண காரணம் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு சரியாக தெரியவில்லை. உள்ளே வைக்கோல் வைக்கப்பட்டதற்கு காரணம் பாதத்தை சூடாக வைத்திருக்க காப்புப் பொருளாக வைக்கோல் பயன்படுத்தப்பட்டதா அல்லது அணியாமல் இருக்கும்போது ஷூவின் வடிவத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாவோ இருக்கலாம். முன்னணி தொல்லியல் ஆய்வாளரான ரான் பின்ஹாசி இந்த ஷுவானது ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்பதை தீர்மானிக்க முடியவில்லை என்றார். இந்த ஷுவின் அளவு, தோராயமாக பெண்ணின் காலணி அளவாக அமெரிக்கா மற்றும் கனடா அளவு 7, ஐரோப்பிய அளவு 37, இங்கிலாந்து அளவு 6, என்று இருக்கலாம் என்கிறார். மேலும் அந்த சகாப்தத்திலிருந்த ஒரு மனிதனின் அளவுக்கு செய்யப்பட்டிருக்கலாம்" என்று கூறினார். இந்த ஷூவை இறுக்கிக் கட்ட கயிறுகளும் உள்ளன.
ஆக்சுபோர்டு மற்றும் கலிபோர்னியாவில் உள்ள இரண்டு கதிர்க்கரிம ஆய்வகங்களில் இந்த ஷூ கி.மு. 3,500 க்கு முந்தையது என்று நிறுவப்பட்டது. இந்தக் காலக்கட்டமானது ஏட்சி பனிமனிதன் காலத்தைவிட, இந்த தோல் ஷுவின் காலம் சில நூறு ஆண்டுகள் பழையது. ஸ்டோன் ஹெஞ்சை விட 400 ஆண்டுகள் பழையது, மற்றும் கிசாவின் பெரிய பிரமிட்டைவிட 1,000 ஆண்டுகள் பழையது. [3]
இதை இயற்கையிடமிருந்து பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர், அரேனி -1 ஷூ யெரெவனின் ஆர்மீனியாவின் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [4]
குறிப்புகள்
தொகு- ↑ Oldest Leather Shoe A ‘Dream’ Find For Armenian Scientist, Armenia Liberty (RFE/RL), June 12, 2010.
- ↑ "Oldest Leather Shoe Steps Out After 5,500 Years". Huffington Post. http://www.huffingtonpost.com/2010/06/10/oldest-leather-shoe-steps_n_607264.html.
- ↑ 3.0 3.1 "What's Older Than the Pyramids and Smells Worse Than a Mummy?". Fox News. June 9, 2010. http://www.foxnews.com/scitech/2010/06/09/oldest-leather-shoe-archaeology/. பார்த்த நாள்: June 9, 2010.
- ↑ Gevorgyan, Siranuysh (June 14, 2010). "Do You Have that in a Size 38?: World’s oldest shoe to go on display in Yerevan". ArmeniaNow.com இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 23, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101023081722/http://www.armenianow.com/arts_and_culture/23683/ancient_shoe_found_armenia. பார்த்த நாள்: June 14, 2010.