அரை-முழுவெண்
கணிதத்தில், அரை-முழுவெண் (half-integer) என்பது பின்வரும் வடிவிலமைந்த ஒரு எண்:
- (இங்கு ஒரு பூச்சியமில்லா முழு எண்)
எடுத்துக்காட்டு:
ஒரு முழுவெண்ணை இரண்டால் வகுக்கக் கிடைப்பது எப்பொழுதும் அரை-முழுவெண்ணால இருப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். ஒற்றை முழுவெண்களை இரண்டால் வகுக்கும்போது மட்டுமே அரை-முழுவெண்கள் கிடைக்கும். இக்காரணத்தினால் சில சமயங்களில் அரை-முழுவெண்கள், "அரை-ஒற்றை முழுவெண்கள்" என அழைக்கப்படுகின்றன. ஒரு முழுவெண்ணை இரண்டின் அடுக்குகளால் வகுக்கக் கிடைக்கும் எண்களின் (இருபடி விகிதமுறுஎண்) கணத்தின் உட்கணமாக அரை முழுவெண்கள் அமைகின்றன.[1]
குறியீடும் இயற்கணித அமைப்பும்
தொகுஅரை-முழுவெண்களின் கணக் குறியீடு:
முழுவெண்களும் அரை-முழுவெண்களும் சேர்ந்து கூட்டல் செயலியின்கீழ் ஒரு குலமாகும். இக்குலத்தின் குறியீடு:[2] எனினும் இவ்விரு எண்களும் வளையமாக இருக்காது. ஏனெனில் இரு அரை-முழுவெண்களின் பெருக்குத்தொகை மீண்டுமொரு அரை-முழுவெண்ணல்ல. எடுத்துக்காட்டாக [3] இவ்வெண்களை உள்ளடக்கிய மிகச்சிறிய உள்வளையம், இருபடி விகிதமுறு எண்களின் வளையம் ( ) ஆகும்.
பண்புகள்
தொகு- ஒரு ஒற்றையெண்ணாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" அரை-முழுவெண்களின் கூட்டுத்தொகையும் ஒரு அரை-முழுவெண்ணாக இருக்கும். உம் இதில் அடங்கும்.
- ஒரு அரை-முழுவெண்ணின் எதிரெண்ணும் ஒரு அரை-முழுவெண்ணாகும்.
- முழுவெண்கள் கணத்திலிருந்து அரை-முழுவெண்கள் கணத்திற்கு , ( ஒரு முழுவெண்) என்ற இருவழிக்கோப்பு அமையுமென்பதால், அரை-முழுவெண்கள் கணத்தின் எண்ணளவை, முழுவெண்கள் கணத்தின் எண்ணளவைக்குச் சமமாகும்.
பயன்பாடு
தொகுதொடர் பெருக்கச் சார்பானது முழுவெண்கள் தருமதிப்புகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டாலும் அதனை காமா சார்பைப் பயன்படுத்திப் பின்னவடிவத் தருமதிப்புகளுக்கும் நீட்டிக்கலாம். ஆரமுள்ள n-பரிமாணப் பந்தின் கனவளவின் வாய்பாட்டில் காமா சார்பு முக்கிய பங்கு வகிக்கிறது:[4]
அரை-முழுவெண்களின் காமா சார்பானது, -இன் வர்க்கமூலத்தின் முழுவெண் மடங்குகளாக இருக்கும்: ( என்பது இரட்டைத் தொடர் பெருக்கத்தைக் குறிக்கிறது)
மேற்கோள்கள்
தொகு- ↑ Sabin, Malcolm (2010). Analysis and Design of Univariate Subdivision Schemes. Geometry and Computing. Vol. 6. Springer. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642136481.
- ↑ Turaev, Vladimir G. (2010). Quantum Invariants of Knots and 3-Manifolds. De Gruyter Studies in Mathematics. Vol. 18 (2nd ed.). Walter de Gruyter. p. 390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783110221848.
- ↑ Boolos, George; Burgess, John P.; Jeffrey, Richard C. (2002). Computability and Logic. Cambridge University Press. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521007580.
- ↑ "Equation 5.19.4". NIST Digital Library of Mathematical Functions. U.S. National Institute of Standards and Technology. 2013-05-06. Release 1.0.6.