எண்ணளவை
கணிதத்தில், ஒரு கணத்தின் எண்ணளவை (cardinality) என்பது அக்கணத்திலுள்ள உறுப்புக்களின் எண்ணிக்கையின் அளவாகும். எடுத்துக்காட்டாக கணம் A = {1,2,3} வில் மூன்று உறுப்புகள் உள்ளன. எனவே A வின் எண்ணளவை மூன்றாகும். இருவழிக்கோப்புகள், உள்ளிடுகோப்புகளைக் கொண்டு கணங்களை நேரிடையாக ஒப்பீடு செய்தல், முதலெண்களைப் பயன்படுத்தல் என இரு வழிகளில் எண்ணளவையானது அணுகப்படுகிறது.[1]
மற்ற அளவைகளோடு குழப்பம் ஏற்படாதவரை ஒரு கணத்தின் எண்ணளவையானது அக்கணத்தின் அளவு எனவும் அழைக்கப்படுகிறது.[2]
எண்ணளவையைக் குறிக்க |A|, card(A), #A, n(A) A போன்ற குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன.
கணங்களை ஒப்பிடுதல்
தொகுஒரு முடிவுறு கணங்களைப் பொறுத்தவரை எண்ணளவை என்பது அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். எண்ணளவைக் கருத்துருவை முடிவிலி கணங்களுக்கு நீட்டிக்கும்போது குறிப்பிலா கணங்களை ஒப்பிடும்முறையை வரையறுத்தல் அவசியமாகிறது.
வரையறை 1 : | A | = | B |
தொகு- A , B கணங்களுக்கிடையில், A இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட ஒரு இருவழிக்கோப்பு (உள்ளிடு மற்றும் முழுக்கோப்பாக அமையும் ஒரு சார்பு) இருக்குமானால், அவ்விரு கணங்களின் எண்ணளவைகள் சமமானவையாக இருக்கும். அதாவது, | A | = | B |.
- எண்ணளவை சமமாகவுள்ள கணங்கள் ≈, ~ ஆகிய குறியீடுகளால் இணைக்கப்படுகின்றன:
- A≈B அல்லது A~B
- எடுத்துக்காட்டு:
- E = {0, 2, 4, 6, ...} - எதிர்மமில்லா இரட்டை எண்களின் கணம்.
- N' = {0, 1, 2, 3, ...} - இயல் எண்களின் கணம்.
- f(n) = 2n என்ற சார்பு, N இலிருந்து E க்கு வரையறுக்கப்பட்ட இருவழிக்கோப்பாக உள்ளதால் | E | = | N | ஆக இருக்கும்.
வரையறை 2: | A | ≤ | B |
தொகுA இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட ஒரு உள்ளிடு சார்பு இருக்குமானால், A இன் எண்ணளவை B இன் எண்ணளவையை விடச் குறைந்ததாகவோ சமமானதாகவோ இருக்கும்.
- | A | ≤ | B |
வரையறை 3: | A | < | B |
தொகுA இலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட ஒரு உள்ளிடு சார்பு இருந்து, இருவழிச் சார்பு இல்லாமல் இருந்தால் A இன் எண்ணளவை B இன் எண்ணளவையை விடக் கண்டிப்பாகக் குறைந்ததாக இருக்கும்.
- | A | < | B |
- எடுத்துக்காட்டு:
N = இயல் எண்களின் கணம்.
- R = மெய்யெண்களின் கணம்.
- உள்ளடக்கல் கோப்பு, i : N → R ஒரு உள்ளிடு சார்பாகும். ஆனால் N → R வரையறுக்கப்பட்ட எந்தவொரு இருவழிச் சார்பும் கிடையாது என்பதால்
- | N | < | R |
எடுத்துக்காட்டுகளும் பண்புகளும்
தொகு- X = {a, b, c}, Y = {ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா} கணங்களுக்கிடையில் { (a, ஆப்பிள்), (b,ஆரஞ்சு), (c, கொய்யா)} என்ற இருவழிச் சார்பு அமைந்துள்ளதால் | X | = | Y | = 3.
- | X | < | Y |, எனில் | X | = | Z | மற்றும் Z ⊆ Y என்றவாறு Z என்ற கணம் இருக்கும்.
- | X | ≤ | Y | மற்றும் | Y | ≤ | X | எனில் | X | = | Y |. இக்கூற்று முடிவிலி கணங்களுக்கும் பொருந்தும்.
ஒன்றிப்பும் வெட்டும்
தொகுA , B என்பவை சேர்ப்பில்லா கணங்கள் எனில்:
இதிலிருந்து ஒன்றிப்பு கணங்கள் மற்றும் வெட்டு கணங்களின் எண்ணளவைகள் கீழ்வருமாறு தொடர்புபடுத்தப்படுகின்றன:[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Weisstein, Eric W., "Cardinal Number", MathWorld.
- ↑ வடிவவியலில் நீளம், பரப்பளவு போன்றவை – முடிவுறு நீளமுள்ள கோடானது புள்ளிகளாலான முடிவிலி எண்ணளவை கொண்ட கணமாகும்.
- ↑ Friedrich M. Hartogs (1915), Felix Klein; Walther von Dyck; டேவிடு இல்பேர்ட்டு; Otto Blumenthal (eds.), "Über das Problem der Wohlordnung", Mathematische Annalen, Leipzig: B. G. Teubner, 76 (4): 438–443, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/bf01458215, பன்னாட்டுத் தர தொடர் எண் 0025-5831
- ↑ Felix Hausdorff (2002), Egbert Brieskorn; Srishti D. Chatterji; et al. (eds.), Grundzüge der Mengenlehre (1. ed.), Berlin/Heidelberg: Springer, p. 587, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-42224-2 - Original edition (1914)
- ↑ Applied Abstract Algebra, K.H. Kim, F.W. Roush, Ellis Horwood Series, 1983, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85312-612-7 (student edition), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85312-563-5 (library edition)