அரோல்டு ஜெப்ரீசு

பிரித்தானிய வானியலாளரும் புள்ளியியலாளரும் புவி இயற்பியலாளரும்

சர் அரோல்டு ஜெப்ரீசு (Sir Harold Jeffreys),[3][4] (22 ஏப்பிரல் 1891 – 18 மார்ச்சு 1989) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் புள்ளியியலாளரும் புவி இயற்பியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். 1939 இல் இவர் வெளியிட்ட இவரது wநூலாகிய நிகழ்தகவுக் கோட்பாடு (Theory of Probability)நிகழ்தகவு சார்ந்த பாயேசியன் கண்ணோட்டத்துக்குப் புத்துயிர்ப்பு அளிப்பதில் பெரும்பங்காற்றியது.[5][6]

சர் அரோல்டு ஜெப்ரீசு
Sir Harold Jeffreys
பிறப்பு(1891-04-22)22 ஏப்ரல் 1891
பேட்பீல்டு
இறப்பு18 மார்ச்சு 1989(1989-03-18) (அகவை 97)
கேம்பிரிட்ஜ்
துறைகணிதவியல்
புவி இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்ஆர்ம்சுடிராங் கல்லூரி, தர்காம் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
எர்மன் போண்டி[1]
சிட்னி கோல்டுசுட்டீன்
வசந்து உசுர்பசார்]]
பிலிப் ஜேம்சு மெசேஜ்
ஆந்திரூ யங்[2]
விருதுகள்ஆடம்சு பரிசு (1926)
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1937)
[[அரசு கழக ஆய்வுறுப்பினர்]] (1925)[3]
மர்ச்சிசன் பதக்கம் (1939)
அரசு பதக்கம் (1948)
வில்லியம் போவி பதக்கம் (1952)
கய் பதக்கம் (தங்கம், 1962)
வெட்டிலெசன் பரிசு]] (1962)
வொலாசுட்டன் பதக்கம் (1964)
துணைவர்பெர்த்தா சுவிர்ல்சு
சர் அரோல்டு ஜெப்ரீசுக்கான விருது வில்லை, நியூகேசில் பல்கலைக்கழகம்

கல்வி

தொகு

இவர் இங்கிலாந்தின் தர்காம் ஆட்சிப் பிரிவில் உள்ள வாழ்சிங்டனில் அமைந்த பேட்பீல்டில் பிறந்தார். இவரது தந்தையார் பேட்பீல்டுபேராயப் பள்ளியின் தலைமை ஆசிரியராகிய இராபெர்ட் ஆல் ஜெப்ரீசு ஆவார். இவரது தாயார் எலிசபத் மேரி சார்ப்பே ஆவார்.[7] இவர் தன் தந்தையாரின் பள்ளியில் கல்விகற்று, பின் தர்காம் பல்கழகத்தினைச் சேர்ந்த, நியூசேசிலில் இருந்த ஆர்ம்சுடிராங் கல்லூரியில் இலண்டன் பல்கலைக்கழகப் புறநிலைக் கல்வித் திட்ட்த்தில் பயின்றார் .[8]

வாழ்க்கைப்பணி

தொகு

இவர் 1914 இல் கேம்பிரிட்ஜ் புனித ஜான் கல்லூரியில் ஆய்வு உறுப்பினர் ஆனார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதமும் புவு இயற்பியலும் கற்பித்தார். இறுதியா அங்கு புளூமிய வானியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

இவர் இயற்பியலாளரும் கணிதவியலாளருமான பெர்த்தா சுவிர்ல்சுவை (1903–1999)1940 இல் மணந்தார். இருவரும் இணைந்து கணித இயற்பியல் முறைகள் (Methods of Mathematical Physics) எனும் நூலை எழுதினர்.

இவரது பெரும்பங்களிப்புகள் நிகழ்தகவுக்கான பாயேசிய அணுகுமுறையை உருவாக்கியதும் புவி அகடு நீர்மநிலையில் அமைகிறது எனும் கருதுகோளும் ஆகும்.[9] இவருக்கு 1953 இல் சர் பட்டம் வழங்கப்பட்டது.

இவர் 1924 அளவில் நேரியல் இரண்டாம்படி வகைநுண் கணிதவியல் சமன்பாடுகளுக்கான தோராயத் தீர்வுகளைத் தரும் பொதுமுறையை உருவாக்கினார். இது சுரோடிஞ்சரின் சமன்பாட்டுக்கும் பொருந்தும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் சுரோடிஞ்சர் தன் சமன்பாட்டை வெளியிட்டார். வின்ட்செல்லும் கிராமெர்சும் பிரில்லவுயினும் , ஜெப்ரீசின் முந்தைய பணியை அறியாததால், இம்மூவரின் பெயரில் வழங்கும் WKB தோராயப் பணிக்கு முன்னரே ஜெப்ரீசு ஆற்றிய பணி கண்டுகொள்ளப்படாமலே இருந்தது.[10]

இவர் 1937 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தைப் பெற்றார். 1960 இல், இவர் அரசு கழகத்தின் கோப்ளே பதக்கத்தைப் பெர்றார். இவர் 1962 இலரசு புள்ளியியல் கழகத்தின் பொன்னாற் செய்த குய் பதக்கத்தைப் பெற்றார். இவர் 1948 இல் பெலிஜிய அறிவியல், எழுத்து, கலைக் கல்விக்கழகத்தின் பிரிக்சு சார்லசு இலாகிரேஞ்சு விருதைப் பெற்றார். [11]

இவர் 1939 முதல் 1952 வரை பன்னாட்டு சூரியவியல் மையத்துக்கு இயக்குநராக விளங்கியுள்ளார்.

இயற்பியலாளராலும் நிகழ்தகவுக் கோட்பாட்டாளர் எடுவின் டி. ஜாய்னெசாலும் எழுதப்பட்ட நிகழ்தகவுக் கோட்பாடு: அறிவியலின் அளவையியல்9தருக்கவியல்) எனும் பாடநூல் ஜெப்ரீசுக்கு காணிக்கையாக்கப் பட்டுள்ளது. காணிக்கையில், "இந்த உண்மையைக் கண்டறிந்த் பேணிக்காத்த சர் அரோல்டு ஜெப்ரீசுக்கு" எனக் குறிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் உய்த்தறிவு எனும் ஜெப்ரீசு நூலின் மூன்றாம் பதிப்புப் பின்னிணைப்பு வழியாகத் தான் பை எனும் எண்னின் மதிப்பு பகா எண்ணாக அமைதல் பற்றிய மேரி கார்ட்ரைட்டின் மெய்ப்பிப்பை அறிய வருகிறொம்.

கண்டத்தட்டு நகர்வியலுக்கு எதிர்ப்பு

தொகு

இவரும் இவரது சமகால அறிஞர்களும் ஆல்பிரெடு வாகனர் முன்மொழிந்த கண்ட நகர்வுக் கோட்பாட்டை கடுமையாக மறுத்தனர். இவரைப் பொறுத்தவரை, புவி மேற்பரப்பில் கண்டங்களை நகர்த்தக் கூடிய பேரளவு விசை செயல்படுவற்கான சான்றில்லை என்பதால் கண்ட நகர்வுக்கு இடமே இல்லை.[12] கண்ட நகர்வுக்கும் கண்டத்தட்டு நகர்வியலுக்கும் 1960 களிலும் அதற்கப்பாலும் புவியியல், புவி இயற்பியல் சான்று நிறுவப் பட்டு, புத்தியல் புவியியலின் ஒருங்கினைப்புக் கோட்பாடாக ஏற்ற பின்னரும், ஜெப்ரீசு தன் இறப்புவரை இக்கோட்பாட்டை கடுமையாக எதிர்த்துவந்தார்.

தகைமைகளும் விருதுகளும்

தொகு
  • ஆய்வுறுப்பினர், அரசு கழகம், 1925[3]
  • ஆடம்சு பரிசு, 1927 (புவிக் கட்டமைப்புக்கூறுகள்)
  • பொற்பதக்கம், அரசு வானியல் கழகம், 1937
  • புச்சான் பரிசு, அரசு வானிலையியல் கழகம், 1929
  • மர்ச்சிசன் பதக்கம், புவியியல் கழகம் (பெரும்பிரித்தானியா) 1939
  • விக்டோரியா பதக்கம், அரசு வானிலையியல் கழகம், 1941
  • இலாகுரேஞ்சு பரிசு, பிரசல்சு கல்விக்கழகம், 1948
  • அரசு பதக்கம், 1948
  • வில்லியம் போவி பதக்கம்டி,அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியம், 1952
  • சர் பட்டம், 1953
  • கோப்ளே பதக்கம், அரசு கழகம், 1961
  • வெட்லெசன் பதக்கம், 1962

நூல்தொகை

தொகு
  • புவித் தோற்றமும் வரலாறும் இயற்கட்டமைப்பும், Cambridge University Press, 1924; 5th edn. 1970; 6th edn. 1976
  • கணித இயற்பியலின் ஆராய்ச்சி முறைகள், Cambridge University Press, 1927[13]
  • புவியின் வருங்காலம், Norton & Company, c. 1929
  • அறிவியல் உய்த்தறிவு, Macmillan, 1931; 2nd edn. 1937;[14] 3rd edn. 1973
  • கார்த்தேய உயர்நெறியங்கள்(Tensors). Cambridge University Press 1931;[15] 2nd edn. 1961
  • கடல் அலைகளும் சார்ந்த புவி இயற்பியல் நிகழ்வும், with Vaughan Cornish, Cambridge University Press, 1934
  • நிலநடுக்கங்களும் மலைகளும், Methuen, 1935; 2nd edn. 1950
  • நிகழ்தகவுக் கோட்பாடு, 1939;[16] 3rd edition, Clarendon Press, Oxford, 1961
  • கணித இயற்பியல் முறைகள், with Bertha S. Jeffreys. Cambridge University Press 1946;[17] 2nd edn. 1950; 3rd edn. 1956 with reprintings
  • அணுக்கவரைக்கான தோராயங்கல், Clarendon Press, Oxford, 1962
  • நெட்டாங்கு நோக்கீட்டுத் தரவுகளில் இருந்து பெறும் அச்சலைவும் புவிமுனையின் முடுங்கிய இயக்கமும், Macmillan, 1963
  • சர் அரோல்டு ஜெப்ரீசின் புவி இயற்பியல், பிற அறிவியற்புலங்களின் ஆய்வ்ரைத் திரட்டு, Gordon and Breach Science Publishers, 1971–77

மேற்கோள்கள்

தொகு
  1. Roxburgh, I. W. (2007). "Hermann Bondi 1 November 1919–10 September 2005: Elected FRS 1959". Biographical Memoirs of Fellows of the Royal Society 53: 45–61. doi:10.1098/rsbm.2007.0008. 
  2. கணித மரபியல் திட்டத்தில் அரோல்டு ஜெப்ரீசு
  3. 3.0 3.1 3.2 Alan Cook (1990). "Sir Harold Jeffreys. 2 April 1891–18 March 1989". Biographical Memoirs of Fellows of the Royal Society 36: 302–326. doi:10.1098/rsbm.1990.0034. 
  4. "Errata: Sir Harold Jeffreys. 2 April 1891–18 March 1989". Biographical Memoirs of Fellows of the Royal Society 37: 491–426. 1991. doi:10.1098/rsbm.1991.0025. 
  5. Jaynes, E. T. (2003). Probability Theory: The Logic of Science. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-59271-2.
  6. O'Connor, John J.; Robertson, Edmund F., "அரோல்டு ஜெப்ரீசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  7. BIOGRAPHICAL INDEX OF FORMER FELLOWS OF THE ROYAL SOCIETY OF EDINBURGH 1783 – 2002 (PDF). The Royal Society of Edinburgh. July 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 902 198 84 X. Archived from the original (PDF) on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2017-03-24.
  8. "Papers and Correspondence of Sir Harold Jeffreys". பார்க்கப்பட்ட நாள் 17 September 2008.
  9. Bolt, B. A. (1982). "The Constitution of the Core: Seismological Evidence". Philosophical Transactions of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 306 (1492): 11–20. doi:10.1098/rsta.1982.0062. Bibcode: 1982RSPTA.306...11B. 
  10. Igorʹ Vasilʹevich Andrianov; Jan Awrejcewicz; L. I. Manevitch; Leonid Isaakovich Manevich (2004). Asymptotical mechanics of thin-walled structures. Berlin: Springer-Verlag. pp. 471. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-40876-2.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-11-28. பார்க்கப்பட்ட நாள் 2017-03-24.
  12. Lewis, Cherry (2002). The dating game: one man's search for the age of the Earth. Cambridge, UK: Cambridge University Press. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-89312-7.
  13. Uhler, Horace Scudder (1929). "Review: Operational methods in mathematical physics, by H. Jeffreys". Bull. Amer. Math. Soc. 35 (6): 882–883. doi:10.1090/s0002-9904-1929-04822-5. http://www.ams.org/journals/bull/1929-35-06/S0002-9904-1929-04822-5/. 
  14. Dirk Jan Struik (1939). "Review: Scientific inference by H. Jeffreys". Bull. Amer. Math. Soc. 45 (3): 213–215. doi:10.1090/s0002-9904-1939-06947-4. http://www.ams.org/journals/bull/1939-45-03/S0002-9904-1939-06947-4. 
  15. James Henry Taylor (1933). "Review: Cartesian tensors, by H. Jeffreys". Bull. Amer. Math. Soc. 39 (9): 661. doi:10.1090/s0002-9904-1933-05715-4. http://www.ams.org/journals/bull/1933-39-09/S0002-9904-1933-05715-4. 
  16. Dodd, Edward L. (1940). "Review: Theory of probability, by H. Jeffreys". Bull. Amer. Math. Soc. 46 (9, Part 1): 739–741. doi:10.1090/s0002-9904-1940-07280-5. http://www.ams.org/journals/bull/1940-46-09/S0002-9904-1940-07280-5/. 
  17. John Lighton Synge (1948). "Review: Methods of mathematical physics, by H. Jeffreys and B. S. Jeffreys". Bull. Amer. Math. Soc. 54 (3): 300–303. doi:10.1090/s0002-9904-1948-08974-1. http://www.ams.org/journals/bull/1948-54-03/S0002-9904-1948-08974-1/. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரோல்டு_ஜெப்ரீசு&oldid=3849724" இலிருந்து மீள்விக்கப்பட்டது