அர்சத் மேத்தா

இந்திய வணிகர், பங்கு வணிக தரகர்

ஹர்சத் மேத்தா (Harshad Mehta) மும்பைப் பங்குச் சந்தையின் தரகர் ஆவார். இவர் மும்பைச் பங்குச் சந்தையின் பங்குகளை வாங்கி விற்றதில், 1992-இல் 27 பெரும் பொருளாதார ஊழல் வழக்குகளில் 4,999 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிக்கி[1] பம்பாய் உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை பெற்றவர்.[2] சிறைவாசியாக இருக்கும் போது தனது 47-வது அகவையில் 2001-இல் சிறையில் இறந்தவர். [3] [4][5]

ஹர்சத் மேத்தா
பிறப்பு(1954-07-29)29 சூலை 1954
பனேலி மோதி, ராஜ்கோட், குஜராத், இந்தியா
இறப்பு31 திசம்பர் 2001(2001-12-31) (அகவை 47)
மும்பை
இருப்பிடம்மும்பை, மகாராட்டிரா, இந்தியா
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிவணிகர், பங்குச்சந்தை தரகர்

ஹர்சத் மேத்தா செய்த மோசடி களால், பங்குகளை வாங்குவதிலும், விற்பதிலும் இந்திய வங்கிச் சட்ட விதிகள் மற்றும் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்த சட்ட விதிகளில் இருந்த ஓட்டைகள் கண்டறியப்பட்டு, பின்னர் அதனை அடைத்தனர். பங்குச் சந்தையின் வணிகத்தை மேற்பார்வையிட இந்திய அரசு 1992-இல் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நிறுவியது. பின்னர் இந்த ஊழலை பற்றிய எழுதிய பத்திரிகை ஆசிரியர் சுசேதா தலால் என்பவருக்கு பத்மசிறீ வழங்கப்பட்டது.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The securities scam of 1992 - CBI Archives". www.cbi.gov.in. CBI (Central Bureau of Investigation), India. Archived from the original on 1 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
  2. "SC upholds Harshad Mehta's conviction". Times of India. 14 January 2003 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131023061215/http://articles.timesofindia.indiatimes.com/2003-01-14/india/27279459_1_securities-scam-conviction-mehta-and-two. பார்த்த நாள்: 14 October 2012. 
  3. "Action against Harshad Mehta, Videocon, BPL and Sterlite (Press release 19 April 2001)". www.sebi.gov.in. SEBI (Securities and exchange board of India). பார்க்கப்பட்ட நாள் 30 January 2018.
  4. "Admires of Harshad Mehta". The Hindu Business Line. http://www.thehindubusinessline.in/bline/2002/01/01/stories/2002010102180100.htm. 
  5. "Harshad Mehta's scam unfold". Rediff.com. http://www.rediff.com/money/2001/apr/19sebi1.htm. 
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சத்_மேத்தா&oldid=4168792" இலிருந்து மீள்விக்கப்பட்டது