அர்த்தமாகதிப் பிராகிருதம்
அர்த்தமாகதிப் பிராகிருதம் என்பது, தற்கால பிகார்[3] மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் பேசப்பட்டு வந்ததாகக் கருதப்படும் ஒரு நடு இந்தோ-ஆரிய மொழியும், நாடகப் பிராகிருத மொழியுமாகும். மேலும், இம்மொழி சில முற்காலச் சமண மற்றும் பௌத்த நாடகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஒரு மைய இந்தோ-ஆரிய மொழியாயிருக்கக்கூடும். மேலும், இது பாலி மற்றும் பிற்கால சௌரசேனிப் பிராகிருதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாயுமிருக்கலாம்.[4]
அர்த்தமாகதிப் பிராகிருதம் | |
---|---|
அர்த்தமாகதி | |
பிராமி: 𑀅𑀭𑁆𑀥𑀫𑀸𑀕𑀥𑀻 | |
பிராந்தியம் | இந்தியா |
Extinct | கீழை இந்தி மொழிகளாக உருவெடுத்தது. [1][2] |
இந்தோ-ஐரோப்பியன்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | pka |
மொழிக் குறிப்பு | None |
இது வட்டார மாகதிப் பிராகிருதத்தின் முன்னோடி மொழியாகக் கருதப்பட்டதால் இப்பெயரைப் பெற்றது (பொருள்: அரை-மாகதி).
பாலியுடனான தொடர்பு
தொகுதேரவாத பௌத்த மரபு, நீண்டகாலமாக பாலியும் மாகதி மொழியும் ஒத்தவை எனக் கருதி வந்ததோடு, இதற்கும் அர்த்தமாகதி மொழிக்கும் பல ஒப்புமைகள் இருந்துள்ளன. அர்த்தமாகதி மொழி சமண அறிஞர்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதோடு,[5]சமண ஆகமங்களில் இடம்பெற்றுள்ளது. கௌதம புத்தரும், தீர்த்தங்கரர் மகாவீரரும் மகதத்தில் அறவுரையாற்றியுள்ளனர்.
அர்த்தமாகதிக்கும், பிற்கால மாகதிப் பிராகிருதத்துக்குமிடையில் வேற்றுமைகள் உள்ளதோடு, இவ்வேற்றுமைகள் பாலிமொழியுடனான வேற்றுமைகளுடன் ஒத்துள்ளது. எடுத்துக்காட்டாக, அர்த்தமாகதியில் வரலாற்று ரீதியான, [ல்] ஓசை காணப்படும் அதேவேளை, பிற்கால மாகதியில் [ல்] ஓசை [ர்] ஓசையாக மாற்றம் பெற்றுள்ளது. மேலும், பெயர்ச்சொல் வடிவ மாற்றத்தில், அர்த்தமாகதியில் சொற்கள் [-ஓ] முடிவைப் பெறும் அதேவேளை, மாகதிப் பிராகிருதத்தில் [-ஏ] முடிவு பல இடங்களில் வருகிறது.
பாலி: தம்மபதம் 103:
யோ சகசுசம் சகசுசேன, சங்காமே மானுசே சினே;
ஏகாஞ்ச செய்யமட்டானம் ச வே சங்காமசுத்தமோ.
போரில் ஆயிரமாயிரம் பேரை வெல்லும் மனிதனை விட,
ஒருவன்-அதாவது தன்னை- வெற்றி கொள்பவனே பெரியவன்.
அர்த்தமாகதி: சமன் சூத்தம் 125:
சோ சகசுசம் சகசுசானம், சங்கமே துச்சே சினே.
ஏகம் சினேச்ச அப்பனாம், ஏச சே பரமோ சாவோ.
வெல்லப்படமுடியாத ஒரு போரில், ஒருவன் ஆயிரமாயிரம் எதிரிகளை வெல்லக்கூடும்;
எனினும், மேலான வெற்றி என்பது தன்னை வெல்வதிலே உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Saksena, Baburam (1971). Evolution of Awadhi (a Branch of Hindi). 9788120808553: Motilal Banarsidass Publishers. p. 7.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ Harrison, Selig S. (2015). India: The Most Dangerous Decades. Princeton University Press. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400877805.
- ↑ "Prakrit".
- ↑ Cardona, George; Jain, Dhanesh, eds. (2003), "The historical context and development of Indo-Aryan", The Indo-Aryan Languages, Routledge language family series, London: Routledge, pp. 46–66, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1130-9
- ↑ Constance Jones; James D. Ryan (2006). Encyclopedia of Hinduism. Infobase Publishing. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7564-5.