அர்மின் நவாபி

அர்மின் நவாபி (Armin Navabi), (பிறப்பு:25 டிசம்பர் 1983) born 25 December 1983) ஈரான் நாட்டில் பிறந்த முன்னாள் முஸ்லீம், இறைமறுப்புபாளர், சமயச் சார்பின்மையாளர், அரசியல் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், வலையொலியாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலரும் கனடா நாட்டு குடிமகனும் ஆவார். இவர் தற்போது கனடா நாட்டின் வான்கூவர் நகரத்தில் வசித்து வருகிறார். 2012ஆம் ஆண்டில் இவர் கனடாவில் இணையதளம் மூலம் கட்டற்ற சிந்தனை சமூகத்திற்கான நாத்திக குடியரசு எனும் இலாப-நோக்கமற்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.[1] இதன் தூதரகங்கள் மலேசியா, இந்தோனேசியா]] மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற 100 நாடுகளில் செயல்படுகிறது.[2]இந்த தூதரகங்கள் மூலம் இறை நம்பிக்கையற்றவர்கள், இறை நிந்தனை & இறை விசுவாமற்றவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்ப்படு ஒடுக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு ஆதரவு அளிக்கிறது.[3]

அர்மின் நவாபி
2019ல் அர்மின் நவாபி
பிறப்பு25 திசம்பர் 1983 (1983-12-25) (அகவை 41)
தெகுரான், ஈரான்
தேசியம்ஈரான்
கனடா
பணிஅரசியல் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், வலையொலியாளர்
அறியப்படுவதுசமயச் சார்பின்மை, மனித உரிமை நடவடிக்கைகள், முன்னாள் முஸ்லீம், நாத்திக குடியரசு
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஏன் கடவுள் இல்லை: கடவுளின் இருப்புக்கான 20 பொதுவான வாதங்களுக்கு எளிய பதில்கள்
அரசியல் இயக்கம்சமயச் சார்பின்மை
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

வரலாறு

தொகு

அர்மின் நவாபி சியா இசுலாம் குடும்பத்தில் ஈரான் நாட்டின் தெகுரான் நகரத்தில் 1983ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் 1985 மற்றும் 1986களில் ஜெர்மனி மற்றும் இலண்டனுக்குச் பயணித்தார். 1988ல் மீண்டும் தெகுரான் நகரத்திற்கு திரும்பினார். அவரது குடும்பம் தாராளவாதமாக இருந்தது, குறிப்பாக இறை நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. அர்மின் நவாபி தெகுரான் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் படிப்பை படித்தார்.[4]

படிக்கும் போது இறைமறுப்பு கொள்கைகளை இணையத்தில் தேடினார்.[5].பின்னர் ஈரானை விட்டு, கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிதியியல் துறையில் படிப்பைத் துவங்கினார்.10 அக்டோபர் 2004 அன்று வான்கூவர் நிர்ந்தரமாக தங்கி கனடா நாட்டின் குடியுரிமைப் பெற்றார். அங்கு அவர் 2012ஆம் ஆண்டில் உலகளாவிய நாத்திக சமூகத்தை உருவாக்கவும் மற்றும் செயல்பாட்டிற்கான நாத்திக குடியரசு எனும் அறக்கட்டளையை நிறுவினார். இது இணையத்தில் சக நாத்திகர்களைத் தேடுவதற்கு அவரைத் தூண்டியது.

படைப்புகள்

தொகு
  • ஏன் கடவுள் இல்லை: கடவுளின் இருப்புக்கான 20 பொதுவான வாதங்களுக்கு எளிய பதில்கள் (2014)
  • மத்திய கிழக்கிலிருந்து மதச்சார்பற்ற ஜிஹாதிகள் (2017) (அலை ரிஷ்வி, யாஷ்மின் முகமது மற்றும் பைசல் சகீத் முக்தாருடன் இணைந்து)[5] In January 2018, the show was renamed Secular Jihadists for a Muslim Enlightenment, with Rizvi and Navabi as co-hosts.[6]
  • Navabi, Armin; Hise, Nicki (2014). Why There Is No God. Simple Responses to 20 Common Arguments for the Existence of God. CreateSpace Independent Publishing Platform. p. 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781502775283.

மேற்கோள்கள்

தொகு
  1. Atheist Pepublic
  2. "Atheism is unconstitutional, says Malaysian deputy minister". Today Online (Mediacorp). 23 November 2017. http://www.todayonline.com/world/atheism-unconstitutional. பார்த்த நாள்: 26 November 2017. 
  3. Wouter van Cleef (7 August 2017). "In Maleisië geldt: gij zult geen atheïst zijn" (in nl). Trouw. https://www.trouw.nl/home/in-maleisie-geldt-gij-zult-geen-atheist-zijn-~ab9d88f0/. பார்த்த நாள்: 18 September 2017. 
  4. Freddy Hayward (8 February 2019). "Armin Navabi on transgender rights, the regressive left, and atheism". Cherwell (Oxford Student Publications Limited). 
  5. 5.0 5.1 Seth Andrews (15 July 2017). "Armin Navabi: The Poison Pill of Islam (Part 2 of 2)". The Thinking Atheist. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  6. "Secular Jihadists for a Muslim Enlightenment". பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.

வெளி இணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்மின்_நவாபி&oldid=4173210" இலிருந்து மீள்விக்கப்பட்டது