அர்விந்த் கிருஷ்ணா

அர்விந்த் கிருஷ்ணா (Arvind Krishna)(பிறப்பு 1962) இவர் ஒரு இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகியாவார். இவர் ஏப்ரல் 2020 முதல் ஐபிஎம்மின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.[3] கிருஷ்ணா தனது வாழ்க்கையை 1990 இல் ஐபிஎம்மில், ஐபிஎம்மின் தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் [4] தொடங்கினார். மேலும் 2015 இல் மூத்த துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.[5][6]

அர்விந்த் கிருஷ்ணா
பிறப்பு1962 (அகவை 61–62)
மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா[1]
குடியுரிமைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்[2]
கல்விஇந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் பிடெக்
இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்) அறிவியலில் முத்கலைப்பட்டம், முனைவர்)
பணிஐபிஎம்மின் தலைமை நிர்வாக அதிகாரி
பணியகம்ஐபிஎம்
முன்னிருந்தவர்கின்னி ரோமட்டி

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் தொகு

கிருஷ்ணா இந்தியாவின் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார்.[1][7] இவரது தந்தை, மேஜர் ஜெனரல் வினோத் கிருஷ்ணா, இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரி, இவரது தாயார் ஆரத்தி கிருஷ்ணா, இராணுவ விதவைகளின் நலனுக்காக பணியாற்றினார்.[8][9]

1985 ஆம் ஆண்டில் கான்பூரில் உள்ள இந்திய தொழிநுட்பக் கழகத்தில் மின்பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெறுவதற்கு முன்பு தேராதூனிலுள்ள செயின்ட் ஜோசப் அகாடமி மற்றும் தமிழ்நாட்டின் குன்னூர் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் 1990 இல் அர்பானா-சாம்பேனில் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியலில் முனைவர் பெற அமெரிக்கா சென்றார்.

தொழில் தொகு

கிருஷ்ணா 1990 இல் ஐபிஎம்மில் தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். மேலும் 2015 ஆம் ஆண்டில் ஐபிஎம் ஆராய்ச்சியின் மூத்த துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.[10] பின்னர் இவர் ஐபிஎம்மின் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருள் பிரிவின் மூத்த துணைத் தலைவரானார். இவர் ஒரு பன்னிரெண்டுக்கும் அதிகமான காப்புரிமைகளுக்கு இணைந்து எழுதியுள்ளார், ஐஇஇஇ மற்றும் ஏசிஎம் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்துள்ளா. மேலும் தொழில்நுட்ப பத்திரிகைகளில் விரிவாகவும் எழுதியுள்ளார். செயற்கை நுண்ணறிவு, கிளவுட், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் பிளாக்செயின் ஆகியவற்றில் ஐபிஎம் நிறுவனத்திற்கான புதிய சந்தைகளை உருவாக்குவதற்கும் விரிவாக்குவதற்கும் இவர் தலைமை தாங்கினார். ஐபிஎம் 34 பில்லியன் டாலர் ரெட் ஹட்டை கையகப்படுத்தியதன் பின்னணியில் இவர் ஒரு உந்து சக்தியாக இருந்தார். இது சூலை 2019 இல் மூடப்பட்டது.

சைப்ரல் 6, 2020 முதல் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2012 முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கின்னி ரோமெட்டி பதவி விலகியதையடுத்து இவர் அப்பதவிக்கு வந்தார். இவர் அமெரிக்காவின் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக சத்யா நாதெல்லா, சாந்தனு நாராயண் மற்றும் சுந்தர் பிச்சை ஆகியோருடன் சேர்ந்தார்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Meet Arvind Krishna, new IBM CEO who is latest south Indian to head global IT company". இந்தியா டுடே. February 1, 2020. https://www.indiatoday.in/technology/news/story/meet-arvind-krishna-new-ibm-ceo-who-is-latest-south-indian-to-head-global-it-company-1642327-2020-02-01. 
  2. "Indian-origin Arvind Krishna to take over as CEO of IBM in April; here's all you need to know about the man who succeeds Virginia Rometty". Firstpost. January 31, 2020 இம் மூலத்தில் இருந்து October 9, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201009115428/https://www.firstpost.com/business/indian-origin-arvind-krishna-to-take-over-as-ceo-of-ibm-in-april-heres-all-you-need-to-know-about-the-man-who-succeeds-virginia-rometty-7981511.html. 
  3. "IBM names Indian-origin Arvind Krishna as CEO". https://www.deccanchronicle.com/technology/in-other-news/310120/ibm-names-indian-origin-arvind-krishna-as-ceo.html. 
  4. "IBM's 'surprise' CEO: Arvind Krishna to take over from Ginni Rometty". https://www.reuters.com/article/us-ibm-ceo-factbox/ibms-surprise-ceo-arvind-krishna-to-take-over-from-ginni-rometty-idUSKBN1ZU2LW. 
  5. "Arvind Krishna". லிங்டின். Archived from the original on September 14, 2015. பார்க்கப்பட்ட நாள் October 8, 2020.
  6. Morris, David Z.. "What you need to know about new IBM CEO Arvind Krishna". https://fortune.com/2020/02/03/ibm-ceo-arvind-krishna-what-you-need-to-know/. 
  7. "Arvind Krishna ascends beyond cloud at IBM". Economic Times. February 1, 2020. https://tech.economictimes.indiatimes.com/news/corporate/arvind-krishna-ascends-beyond-cloud-at-ibm/73825286. 
  8. Sangani, Priyanka (February 3, 2020). "Industry leaders, peers raise a toast to good news". Economic Times. https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/industry-leaders-peers-raise-a-toast-to-good-news/articleshow/73824893.cms. 
  9. John, Sujit (February 1, 2020). "Indian-origin technologist Arvind Krishna to lead IBM, joins club of global Indian CEOs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/business/india-business/indian-origin-technologist-arvind-krishna-to-lead-ibm-joins-club-of-global-indian-ceos/articleshow/73819678.cms. 
  10. Morgan, Timothy Prickett (January 12, 2015). "IBM Reorganizes To Reflect Its New Business Machine". IT Jungle. Archived from the original on January 1, 2020. பார்க்கப்பட்ட நாள் October 9, 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்விந்த்_கிருஷ்ணா&oldid=3628091" இலிருந்து மீள்விக்கப்பட்டது