அறபா தேசிய பாடசாலை, வெலிகமை


அறபா தேசிய பாடசாலை இலங்கையில் வெலிகமை என்ற இடத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலையாகும்.

அறபா தேசிய பாடசாலை
[[படிமம்:|250px|]]
அறபா தேசிய பாடசாலை
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் ,
(முயன்றவன் பெற்றுக் கொள்வான்)
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் தென் மாகாணம்
மாவட்டம் மாத்தறை
நகரம் வெலிகமை
இதர தரவுகள்
அதிபர் ஜெ.எஸ். வாரிஸ் அலி மௌலானா
துணை அதிபர் எம்.எஸ்.எம் இர்சாத்
ஆசிரியர்கள் 53 பேர்()
ஆரம்பம் 1888

வரலாறு

தொகு

செய்யித் முஸ்தஃபா நொத்தாரிஸ் ஹாஜியார் வீட்டில் திண்ணைப் பள்ளிக்கூடமாக நீண்ட காலமாக இயங்கி வந்த வெலிகம அறபா தேசியப் பாடசாலை 1888 ஆம் ஆண்டு அவரது மூத்தமகனான அஹ்மது நெய்னா மரிக்கார் அங்கு பாட போதனைகளை நடாத்தி வந்தார்.


1901 ஆம் ஆண்டு அசெய்யித் சாகிர் மௌலானா, முகம்மது இப்ராகிம் ஆலிம், அலியார் மரிக்கார் ஹஜியார், ஒ.எல்.எம்.ஐதுருஸ் ஆலிம், முஸ்தபா நொதாரிஸ் ஹாஜியார், அப்துல் ஹக் மரிக்கார் மத்திச்சம், இஸ்மாயில் ஹாஜியார் ஆகிய பெரியார்களின் தலைமையிலான ஹிதாயதுல் இசுலாம் என்னும் சங்கம் தற்போதைய கல்லூரியின் கனிட்ட பிரிவு அமைந்துள்ள இடத்தில் ஓர் ஓலைக் குடிசையை அமைத்து, அரசாங்கத்திற்கு ஒப்படைத்ததன் மூலம் அரசாங்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு புதுக்கட்டடம் அமைக்கப்பட்டு பாடசாலை இயங்கி வந்தது. முதலில் இது தமிழ்ப் பாடசாலையாகவும் பின்னர் ஆங்கில, தமிழ் பாடசாலையாகவும் இருந்து மீண்டும் தமிழ் பாடசலையாகவும் அதன் பின்னர் மும்மொழிப் பாடசாலையாகவும் மாற்றம் பெற்றது.

அதிபர்களாகத் தடம் பதித்தோர்

தொகு
  1. எஸ்.எம்.என்.எச். அஹமட் நெய்னா மரைக்கார் 1889-1917)
  2. எஸ்.ஏ. ஹன்னான் (1917-1920)
  3. ஜீ.எஸ்.டீ.எம். வல்லிபுரம் (1920-1926)
  4. எஸ்.ஏ. அம்பலம் (1926-1929)
  5. கே. தேவசகாயம் (1929-1930)
  6. எச். ஐசக் (1930-1933)
  7. சீ. பொன்னையா (1933-1935)
  8. அல்ஹாஜ் த. சா. அப்துல் லத்தீப் (1935-1946)
  9. எம்.ஐ. முகமட் (தமிழ்ப் பிரிவு) (1946-1951)
  10. கே. எட்வர்ட் (ஆங்கிலப் பிரிவு) (1946-1947)
  11. ஏ.எச்.எம்.எம். வெபா (ஆங்கிலப் பிரிவு) (1947-1951)
  12. பீ.எம்.எம். ஜுனைத் (1951-1955)
  13. ஏ.எச்.எம்.எம். வெபா (1955-1965)
  14. பீ.எம். நஈம் (1965-1967)
  15. அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.எம். முஸம்மில் (1967-1970)
  16. கே.எம். அபுபக்கர் (1970-1972)
  17. அல்ஹாஜ் எம்.என். உமர் மிஹ்ளார் (1972-1972)
  18. அல்ஹாஜ் எம்.வை.எம். முஸ்லிம் (1973-1975)
  19. அல்ஹாஜ் எம்.என். உமர் மிஹ்ளார் (1975)
  20. எஸ்.எப்.ஏ.எம். நாளிர் (1975-1977)
  21. ஏ.ஆர்.எம். ஹுஸைன் (1977-1982)
  22. அல்ஹாஜ் ஏ.எம்.எம். உவைஸ் (1982)
  23. எஸ்.எப்.ஏ.எம். நாளிர் (1982-1990)
  24. அல்ஹாஜ் எஸ்.ஐ.எம். ஹம்ஸா (1991)
  25. ஸெய்யித் ஹாரிஸ் மௌலானா (1991-1993)
  26. அல்ஹாஜ் எம்.எச்.எம். இஸ்மாயில் (1993-1996)
  27. அல்ஹாஜ் ஏ.எம்.எம். ஆரிப் (1996-2001)
  28. ஏ.எம்.எப். மதனியா (2001-2004)
  29. எம்.பீ. மொஹமட் (2004-2006)
  30. வாரிஸ் அலி மௌலானா (2006 இலிருந்து)

சிறந்த பாடசாலையாகத் தெரிவு

தொகு

இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சவின் (2011)66 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டுத் 66 பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் சிறந்த பாடசாலைகளாகத் தெரிவுசெய்யப்பட்டன. அப்பாடசாலைகள் 66 இனுள் அறபா தேசிய பாடசாலையும் சிறந்த கல்வியுட்டலுக்கான பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உசாத்துணைகள்

தொகு

http://arafa.sch.lk/history.html