அறுகுளோரோவசிட்டோன்
அறுகுளோரோவசிட்டோன் (Hexachloroacetone) என்பது Cl3C-CO-CCl3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அறுகுளோரோபுரொப்பனோன் அல்லது பெர்குளோரவசிட்டோன் என்றும் அழைக்கப்படுகிறது. மூலக்கூற்று அமைப்பின் அனைத்து இடங்களிலும் குளோரின் அணுக்கள் பதிலீடு செய்யப்படுவதற்கு சாத்தியமுள்ள காரணத்தால், பொதுவாக குளோரின் அணுக்களின் அமைவிடத்தை அடையாளப்படுத்தும் எண்கள் இங்குக் குறிப்பிடப்படுவதில்லை. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் சிறிதளவு நீரில் கரைகிறது. . அறுகுளோரோவசிட்டோனின் பிரதானப்பயன் தீங்குயிர்கொல்லி பயன்பாடு ஆகும். கொசு விரட்டி போன்ற பூச்சி விரட்டிகள் தயாரிப்பில் இச்சேர்மம் பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1,1,3,3,3-அறுகுளோரோபுரொப்பனோன்
| |
வேறு பெயர்கள்
பெர்குளோரோவசிட்டோன்
HCA | |
இனங்காட்டிகள் | |
116-16-5 | |
ChemSpider | 13873693 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19122 |
| |
பண்புகள் | |
C3Cl6O | |
வாய்ப்பாட்டு எடை | 264.75 கி/மோல் |
அடர்த்தி | 1.444 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | −2 °C (28 °F; 271 K) |
கொதிநிலை | 204 °C (399 °F; 477 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Handbook of Chemistry and Physics, 1st student edition, CRC Press (1987)