அறுபுளோரோ தைட்டானிக் அமிலம்

வேதிச் சேர்மம்

அறுபுளோரோ தைட்டானிக் அமிலம் (Hexafluorotitanic acid) F6H8O3Ti என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். வேதிக்கோட்பாடுகளின்படியான திட்டத்தில் இச்சேர்மம் முறையாக ஆக்சோனியம் அறுபுளோரோரிடோதைட்டனேட்டு(2-) என்று அழைக்கப்படுகிறது. எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த உப்பில் [TiF6]2- எண்முக அயனியும், (H3O)+ மற்றும் (H5O2)+ என்ற இரண்டு நேர்மின் அயனிகளும் அடங்கியுள்ளன.[1]

அறுபுளோரோ தைட்டானிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐதரான்; தைட்டானியம்(+4) நேரயனி; எக்சாபுளோரைடு
இனங்காட்டிகள்
ChemSpider 19989125
EC number 241-460-4
InChI
  • InChI=1/6FH.Ti/h6*1H;/q;;;;;;+4/p-4/f6F.Ti.2H/h6*1h;;;/q6*-1;m;2*+1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 161221
  • [H+].[H+].[F-].[F-].[F-].[F-].[F-].[F-].[Ti+4]
பண்புகள்
F6H8O3Ti
வாய்ப்பாட்டு எடை 217.92 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 2.10 கி/செ.மீ3
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அறுபுளோரோசிலிசிக்கு அமிலம்
அமோனியம் அறுபுளோரோதைட்டனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பெரும்பாலான ஆக்சோனியம் உப்புகளைப் போலவே, இது அமிலக் கரைசலில் மட்டுமே நிலைப்புத் தன்மையுடன் உள்ளது. காரச்சூழலில் நெருங்கிய தொடர்புடைய உப்புகள் நீரேற்றப்பட்ட தைட்டானியம் டை ஆக்சைடாக நீராற்பகுப்பு அடைகின்றன.:[2]

(NH4)2TiF6 + 4 NH3 + 2 H2O → TiO2 + 6 NH4F

நீரற்ற புளோரோனியம் அறுபுளோரோரிடோதைட்டனேட்டு(2-) அல்லது H2F)2[TiF6 என்பது நெருங்கிய தொடர்புடைய உப்பாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mootz, D.; Oellers, E.-J.; Wiebcke, M. (1988). "Hexafluorotitan(IV)-Saure: Untersuchungen zur Bildung und Struktur kristalliner Hydrate". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 564: 17–25. doi:10.1002/zaac.19885640103. 
  2. Bichowsky, Foord Von (1957). "Extraction of Titanium(IV) Oxide from Ilmenite". Inorganic Syntheses V: 79–82. doi:10.1002/9780470132364.ch22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132364.