அலஸ்ட்டயர் பில்கிங்டன்
லயனல் அலெக்சான்டர் பெதூன் பில்கிங்டன் (Lionel Alexander Bethune Pilkington) என்னும் இயற்பெயர் கொண்ட சர் அலஸ்ட்டயர் பில்கிங்டன் (Sir Alastair Pilkington) (7 சனவரி 1920 - 5 மே 1995) ஒரு இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் ஆவார். மிதப்புக் கண்ணாடி செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டு பிடித்தவர் இவரே. இவரது இந்தக் கண்டுபிடிப்பு 1960களில் கண்ணாடித் தொழில் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இன்றுவரை கட்டிடத் தொழில் துறையிலும் பிற துறைகளிலும் கண்ணாடி வகித்துவரும் முக்கியமான பங்குக்கு அடிப்படையாக அமைந்தது இந்தக் கண்டுபிடிப்பே ஆகும்.[1][2][3]
அலஸ்ட்டயர் பில்கிங்டன் | |
---|---|
பிறப்பு | 7 சனவரி 1920 கொல்கத்தா |
இறப்பு | 5 மே 1995 (அகவை 75) இலண்டன் |
படித்த இடங்கள் | |
பணி | பொறியாளர், புத்தாக்குனர், தொழில் முனைவோர் |
வாழ்க்கைத் துணை/கள் | Patricia Nicholls Elliott, Kathleen Haynes |
விருதுகள் | அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், Wilhelm Exner Medal, Officer of the Order of the British Empire, Knight Bachelor, Mullard Award |
இளமைக் காலம்
தொகுஅலஸ்ட்டயர் 1920 ஆம் ஆண்டு பிறந்தார். சேர்போன் பள்ளியிலும், கேம்பிரிட்ச்சின் திரித்துவக் கல்லூரியிலும் கல்விபயின்ற இவர், இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னர் படைத்துறையில் அலுவலராகச் சேர்ந்தார். போரின்போது நடுநிலக்கடல் பகுதியில் போரில் ஈடுபட்டிருந்த இவர் கிரீட் வீழ்ச்சியடைந்தபோது போர்க் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்டார். போர் முடிந்தபின் விடுதலையான இவர் மீண்டும் கேம்பிரிட்ச்சுக்கு வந்து கல்வியைத் தொடர்ந்து எந்திர அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர், 1947 ஆம் ஆண்டில் பில்கிங்டன் பிரதர்சு எனப் பெயர்கொண்ட கண்ணாடி உற்பத்தி நிறுவனத்தில் தொழில்நுட்ப அலுவலராகச் சேர்ந்தார்.
மிதப்புக் கண்ணாடியின் கண்டுபிடிப்பு
தொகுஇவர் பணிக்குச் சேர்ந்த காலத்தில் சாளரங்கள், வண்டிகள் முதலானவற்றுக்குத் தேவையான உருத்திரிபு இல்லாத கண்ணாடிகளைச் செய்வதற்கு பில்கிங்டன் நிறுவனம் தாங்களே உருவாக்கிய தட்டு வழிமுறை என்னும் ஒரு முறையைப் பயன்படுத்திக் கண்ணாடிகளை உற்பத்தி செய்து வந்தது. இது மிகவும் செலவு கூடியதும், கழிவு அதிகம் கொண்டதுமான ஒரு முறையாக இருந்தது.
தகட்டுக் கண்ணாடி முறை என்னும் இன்னொரு கண்ணாடி உற்பத்தி முறை மலிவானதாக இருந்தாலும் உருத்திரிபு அற்ற தரமான கண்ணாடிகளை உருவாக்குவதற்கு இம்முறை ஏற்றதாக இருக்கவில்லை. அலஸ்ட்டயர் கண்டு பிடித்த மிதப்புக் கண்ணாடித் தொழில்நுட்பமே மலிவானதும் தரமானதுமான கண்ணாடிகளைச் செய்வதற்கு வழி சமைத்தது. இந்த முறைபற்றிய எண்ணக்கரு 1950 களின் தொடக்கத்திலேயே அலஸ்ட்டயருக்கு இருந்தது ஆயினும், இதனை நடைமுறையில் சாத்தியமாக்க பல ஆண்டுகள் பிடித்தன.
இறுதிக்காலம்
தொகு1970 ஆம் ஆண்டில் இவருக்குப் பிரபுப் பட்டம் வழங்கப்பட்டது. 75 வயது வரை வாழ்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு காலமானார்
மேற்கோள்கள்
தொகு- ↑ Oxley, B. W. (2022). "Lionel Alexander Bethune (Alastair) Pilkington. 7 January 1920—5 May 1995". Biographical Memoirs of Fellows of the Royal Society 74: 339–361. doi:10.1098/rsbm.2022.0025. https://royalsocietypublishing.org/doi/10.1098/rsbm.2022.0025.
- ↑ Ancestry.com. England & Wales, Death Index, 1916–2007 [database on-line]. Provo, UT, US (subscription required) Accessed 3 December 2015
- ↑ "Pilkington PLC biography – Sir Alastair Pilkington". pilkington.com. Archived from the original on 5 March 2007.