அலிக்கோ டங்கோட்டே

அலிக்கோ டங்கோட்டே (Aliko Dangote, பி. ஏப்ரல் 10, 1957, கனோ, நைஜீரியா) ஒரு நைஜீரியத் தொழிலதிபர். டங்கோட்டே குழு என்கிற கூட்டு நிறுவனத்தின் தலைவராக இவர், ஃபோர்ப்ஸ் இதழின் மதிப்பீட்டின் படி 2500 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகில் மிகச் செல்வந்தவர்களின் பட்டியலில் 23ஆவது நிலையில் உள்ளார். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பணகாரரும், உலக கருப்பின மக்கள்கலில் மிகப்பெரிய பணக்காரரும் இவரே.

அலிக்கோ டங்கோட்டே
Aliko Dangote
Aliko Dangote.jpg
அலிக்கோ டங்கோட்டே
பிறப்பு10 ஏப்ரல் 1957 (1957-04-10) (அகவை 63)
கனோ, நைஜீரியா
கல்விவணிகவியல்
படித்த கல்வி நிறுவனங்கள்அல்-அசர் பல்கலைக்கழகம், கைரோ
பணிமுதல்வர், டங்கோட்டே குழு
செயல்பட்ட 
ஆண்டுகள்
1977—இன்று
சொத்து மதிப்புGreen Arrow Up Darker.svgUS$ 25 பில்லியன் (2013)[1]
சமயம்இஸ்லாம்

1977இல், 21 வயதில் டங்கோட்டே ஒரு சிறிய வணிக நிறுவனமாக டங்கோட்டே குழுவை தொடங்கி, தற்போது நைஜீரியா, பெனின், டோகோ, கானா ஆகிய நாடுகளில் வியாபாரம் செய்கிறது. சர்க்கரை, மாவு, சீமைக்காரை உள்ளிட்ட பல பொருட்களை டங்கோட்டே குழு விற்கிறது. தொலைத்தொடர்பிலும் டங்கோட்டே குழு நுழைந்து, நைஜீரியா முழுவதுக்கும் ஒளியிழை கம்பி வலையமைப்பை தற்போது உருவாக்கியிருக்கிறார்.

நைஜீரிய அரசியலில் டங்கோட்டே ஒரு முக்கியமானவர். நைஜீரியாவில் இப்பொழுது ஆட்சியில் இருக்கிற மக்கள் மக்களாட்சிக் கட்சிக்கு கோடி கணக்கான நைரா நன்கொடைகளை அளித்துள்ளார்.

மேற்கோள்கள்தொகு

<

  1. "The World's Billionaires #43 Aliko Dangote". Forbes.com. 11 November 2013. http://www.forbes.com/profile/aliko-dangote/. பார்த்த நாள்: 2013-11-20. 

>

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிக்கோ_டங்கோட்டே&oldid=2714223" இருந்து மீள்விக்கப்பட்டது