அலினா கெலோ செகோபியே
அலினா கெலோ செகோபியே (Alinah Kelo Segobye) சமூக மேம்பாட்டு ஆர்வலர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். சமூக மேம்பாடு மற்றும் எச்.அய்.வி/எய்ட்சு மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்க தொல்லியல் துறையில் கடந்த காலத்தைப் படிப்பதன் எதிர்காலம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.[1] இவர் நமீபியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மனித அறிவியல் தலைமை மற்றும் ஆப்பிரிக்க அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளி ஆவார்.
கல்வி
தொகுசெகோபி போட்சுவானா பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்தார். மேலும் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் 1994 ஆம் ஆண்டில் பெற்றார். [2]
தொழில்
தொகுசெகோபி தென்னாப்பிரிக்காவின் மனித அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலில் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். நமீபியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மனித அறிவியல் தலைமை பேராசிரியராக தனது தற்போதைய பாத்திரத்தில் நுழைவதற்கு முன்பு இவர் போட்சுவானா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். [3] இவர் 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பான் ஆப்பிரிக்க தொல்பொருள் சங்கத்தின் தலைவராக இருந்தார். [4]
அங்கீகாரம்
தொகுசெகோபியே ஆப்பிரிக்க அறிவியல் அகாடமியின் (2018 ஆம் ஆண்டு) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும், [5] தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகத்தின் தாபோ எம்பெக்கி ஆப்பிரிக்க தலைமைத்துவ நிறுவனத்தில் கெளரவப் பேராசிரியராகவும் உள்ளார்.[6] இவர் ஆப்பிரிக்க விரிவான எச்.ஐ.வி/எய்ட்சு கூட்டுக் குழுவில் பணியாற்றுகிறார்.[7]
இவர் 2013 ஆம் ஆண்டு இரண்டாவது யுனெசுகோ எதிர்கால மன்ற ஆப்பிரிக்காவில் உரையாற்ற அழைக்கப்பட்டார். [1]
இவர் பிராட்போர்ட் ரோட்டரி அமைதி மையத்தில் (2016 ஆம் ஆண்டு) வருகை தரும் அறிஞராக இருந்தார். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "UNESCO Future Forum Africa #2: Decolonizing African Futures: Exploring and Realigning Alternative Systems" (PDF). UNESCO. 6 December 2013.
- ↑ Townsend, Leonie. "Prof Alinah Kelo Segobye" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-27.
- ↑ "Alinah Segobye | Faculty of Human Sciences" (in ஆங்கிலம்). Archived from the original on 2020-10-31. பார்க்கப்பட்ட நாள் 2020-02-27.
- ↑ "Congresses and Presidents – PanAfrican Archaeological Association". Archived from the original on 2022-12-01. பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.
- ↑ 5.0 5.1 "Segobye Alinah Kelo | The AAS". www.aasciences.africa. Archived from the original on 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2020-02-27.
- ↑ "Alinah Kelo Segobye". The Conversation (in ஆங்கிலம்). 25 May 2015. பார்க்கப்பட்ட நாள் 2020-02-27.
- ↑ "Welcome to ACHAP". www.achap.org. Archived from the original on 2020-02-10. பார்க்கப்பட்ட நாள் 2020-02-27.