அலிப்பூர்துவார் மகிளா மகாவித்தியாலயா

அலிப்பூர்துவார் மகிளா மகாவித்யாலயா, என்பது அலிபுர்துவாரில் 2007 இல் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரி ஆகும். கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்ல்லூரியின் நிலைய வளாகம் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ளது. இக்கல்லூரி வடக்கு வங்காள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]

அலிப்பூர்துவார் மகிளா மகாவித்தியாலயா
குறிக்கோளுரைஸ்வா வித்யாயா, யா பிமுக்தாயா
வகைஇளங்கலைக்கான பொதுக் கல்வி நிலையம்
உருவாக்கம்2007; 17 ஆண்டுகளுக்கு முன்னர் (2007)
சார்புவடக்கு வங்காள பல்கலைக்கழகம்
தலைவர்டாக்டர் தேப்குமார் முகர்ஜி
அமைவிடம், ,
736121
,
26°29′33″N 89°31′51″E / 26.4924124°N 89.530839°E / 26.4924124; 89.530839
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்Alipurduar Mahila Mahavidyalaya
அலிப்பூர்துவார் மகிளா மகாவித்தியாலயா is located in மேற்கு வங்காளம்
அலிப்பூர்துவார் மகிளா மகாவித்தியாலயா
Location in மேற்கு வங்காளம்
அலிப்பூர்துவார் மகிளா மகாவித்தியாலயா is located in இந்தியா
அலிப்பூர்துவார் மகிளா மகாவித்தியாலயா
அலிப்பூர்துவார் மகிளா மகாவித்தியாலயா (இந்தியா)

ஆரம்பத்தில் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்த் இக்கல்லூரி தற்போது, சொந்தமான இரண்டு கட்டிடங்களைக் கொண்டுள்ளது. பிப்ரவரி 19, 2012 அன்று கல்லூரி அதன் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு இளங்கலைப் படிப்புகளோடு, பல திறன் மேம்பாட்டு படிப்புகள் மற்றும் வாழ்வாதார பயிற்சி திட்டங்களையும் வழங்கி வருகிறது.


சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக சவாலான பிரிவுகளைச் சேர்ந்த முதல் தலைமுறை கற்பவர்களான பெண் மாணவர்களுக்கு சேவை செய்யும் ஒரு கல்வி நிறுவனம் என்ற நோக்கத்துடன் பணிபுரியும் இக்கல்லூரி, தேர்தல் எழுத்தறிவு மன்றம், நாட்டு நலப்பணித்திட்ட பிரிவு மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் போன்றவைகளின் வழியாக பல்வேறு புதுமையான சமூகப் பங்களிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. WARMTH என்ற முயற்சியின் கீழ், அவர்கள் தேவைப்படுபவர்களுக்காக நிரந்தர ஆடை வங்கியை நடத்துகிறார்கள். வன கிராமங்கள் போன்ற தொலைதூர பகுதிகளிலும் துணி விநியோக முகாம்களை நடத்துகின்றனர். அவர்களின் மற்றொரு முயற்சி பிரயாஸ் என்பதாகும். இந்த நடவடிக்கையின் கீழ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகிக்கின்றனர்.[2]

துறைகள் தொகு

கலைப்பிரிவு தொகு

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • சமஸ்கிருதம்
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • சமூகவியல்
  • கல்வி
  • உடற்கல்வி

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3] கல்லூரி அவர்களின் முதல் சுழற்சியில் (2019 மார்ச்) CGPA 1.99 உடன் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.


மாற்றுத் திறனாளிகளுக்கான கொள்கைகளை வடிவமைத்துள்ளதோடு, அவர்களுக்கான அனைத்து வசதிகளையும், கட்டமைபுகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Colleges under University of North Bengal The college also offers postgraduate courses under distance mode under IGNOU and NSOU. Dr. Amitabh Roy is the present Principal of the college. பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
  2. "கல்வி நிறுவனத்தின் தனித்துவம்".
  3. Colleges in West Bengal, University Grants Commission
  4. "மாற்றுத் திறனாளிகளுக்கான கொள்கை".